விரைவில்.. நீட் தேர்வுக்காக இலவச மென்செயலி - ஜீ.வி.பிரகாஷ்

இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என நீட் தேர்வுக்காக இலவச மென்செயலி உருவாக்கும் பணியில் ஜீ.வி.பிரகாஷ் குழு ஈடுபட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 19, 2018, 06:46 PM IST
விரைவில்.. நீட் தேர்வுக்காக இலவச மென்செயலி - ஜீ.வி.பிரகாஷ் title=

எப்பொழுதும் சமூக சார்ந்த விஷயங்களில், ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஹைட்ரோகார்பன், அனிதா மறைவு, நீட் தேர்வு, காவிரி போன்ற சம்பவங்களில் நேரடியாக களத்திற்கு சென்று போரடக்கூடியவர். தனது சமூக வலைத்தளம் மூலமாகவும் தனது கருத்தை பதிவிடக் கூடியவர். இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு தன்னை சமூக அக்கரையில் ஈடுபடுத்திக்கக் கூடியவர். 

நீட் தேர்வால் இனி மரணம் ஏற்படக்கூடாது எனக் கருதி, எளிமையான வழியில் நீட் தேர்வுக்கு தங்களை மாணவ-மாணவிகள் தயார்படுத்திக் கொள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மென்செயலி (Mobile Application) உருவாகி வருகிறார். 

அதைக்குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியாதவது:-

"நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்குச் சென்றபோது, இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி, வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, நீட் தொடர்பாக மூன்று மாதங்களாக வரைவுத்திட்டத்தைத் தயாரித்து, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application)  உருவாகி வருகிறது.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றைக் காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் பணி முடிந்து இந்த மென்செயலி பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்" என ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News