இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப் (WhatsApp). உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதன் தனியுரிமைக் கொள்கை சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்போது, நாளைக்குள், அதாவது மேம் மாதம் 15ம் தேதிக்குள், வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கைக்கு ஒப்புதல் தராவிட்டால், நீங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
நமது WhatsApp செயலியை திறந்தாலே, தனியுரிமைக் கொள்கை தொடர்பான அறிவிக்கைகள் தோன்றுகின்றன. மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலியின் தனியுரிமை கொள்கையை ஏற்க வில்லை என்றால், ஏற்காத பயனர்களின் கணக்கு நீக்கப்படாது என்றாலும், அவர்கள் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
WhatsApp-ன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள தகவல்களில், வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்கவில்லை என்றால், அவர்கள் கணக்கு எதுவும் நீக்கப்படாது. ஆனாலும் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.
அதாவது பயனர்கள், சாட்டிங் தவிர போன் மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை மேற்கொள்ள முடியும், ஆனால், பழைய சாட்டிங் தகவல்களை பார்க்க முடியாது என கூறப்படுகிறது.
முதலில் செயலியில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்படும். வெளியில் இருந்து தகவல்கள் மற்றும் வாட்ஸ் அப் அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம் என்றாலும். பின்னர் படிப்படியாக சேவைகள் குறைக்கப்பட்டு அறிவிப்புகள் குறுந்தகவல்கள் நிறுத்தப்படும். பயனாளியின் கணக்கு நீக்கப்படவில்லை என்றாலும், அதனால் பிரயோஜனம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
ALSO READ | WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!
முன்னதாக, சில மாதங்களுக்கு முன், WhatsApp தனியுரிமை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது, இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது. இதனால், பல பயனர்கள் வாட்ஸ் அப்பிற்கு மாற்றான செயலியான டெலகிராம் மற்றும் சிக்னலுக்கு மாறினர்.
முன்னதாக சில மாதங்களுக்கு முன், வாட்ஸ்அப் போன்ற தனியார் செயலிகள் பயனர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களைப் பகிர விரும்புகின்றன, இதனை நிறுத்த வேண்டும் என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வலுவாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இது ஒரு தனியார் செயலி என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது, உங்கள் தனியுரிமை பாதிக்கப்படுகிறதென்றால், நீங்கள் வாட்ஸ்அப்பை நீக்கலாம் என கருத்து தெரிவித்தது
ALSO READ | WhatsApp-ற்கு குட்டு வைத்த நீதிமன்றம்; மிகப்பெரிய நிறுவனமாக இருக்கலாம்.. ஆனால்....!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR