Solar Eclipse 2020: பகுதி சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தெரியும்

ஞாயிற்றுக்கிழமை காலை 10.22 மணி முதல் பிற்பகல் 1.1 மணி வரை ஒரு பகுதி சூரிய கிரகணத்தை சென்னை நகரத்தில் மக்கள் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 20, 2020, 09:59 PM IST
  • ஒரு பகுதி சூரிய கிரகணத்தை சென்னை நகரத்தில் மக்கள் காணலாம்.
  • சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் காணக்கூடாது.
  • வேலூர், கோயம்புத்தூர் போன்ற தமிழகத்தின் பிற பகுதிகளும் கிரகணத்தை பார்க்கலாம்
Solar Eclipse 2020: பகுதி சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தெரியும் title=

சென்னை: உலகம் முழுவதும் நாளை மிக நீண்ட சூரிய கிரகணம் (Solar Eclipse) நிகழப்போகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.22 மணி முதல் பிற்பகல் 1.1 மணி வரை ஒரு பகுதி சூரிய கிரகணத்தை சென்னை நகரத்தில் மக்கள் காணலாம். சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்கிறது. சூரிய கிரகணங்களை (Solar Eclipse) மூன்று பிரிவுகளாக பிரிப்பார்கள். அது மொத்தம், பகுதி மற்றும் நெருப்பு வளையம் என வகைப்படுத்தப்படும். சூரியனை நேரடியாக வெற்றுக் கண்களால் காணக்கூடாது. அது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

READ | கொரோனா தொற்றுநோய்: ஹரியானா குருக்ஷேத்திரத்தில் 'சூரிய கிரகண கண்காட்சி' ரத்து

சூரியனின் வட்டத்தில் சுமார் 34 சதவீதம் அதிகபட்ச சூரியகிரகணம் (Solar Eclipse in India) சந்திரனால் (Moon) மூடப்பட்டிருக்கும்.

வேலூர், கோயம்புத்தூர் போன்ற தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சில நிமிடங்களுக்கு கிரகணத்தைக் (Eclipse) காண முடியும் என்று இங்குள்ள தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

READ | சூரிய கிரகணம் 2020: டெல்லி, குர்கானில் கிரகணம் தென்படும் நேரங்கள் இங்கே

கடந்த காலங்களைப் போலல்லாமல், முழுமையான ஊரடங்கு காரணமாக மக்கள் பகுதி சூரிய கிரகணத்தைப் (Partial Solar Eclipse) பார்க்க ஏற்பாடு செய்யவில்லை.

விழித்திரையில் காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் சூரியனை நேரடியாக பார்ப்பது பாதுகாப்பற்றது என்றும், கிரகணத்தைப் பார்ப்பதற்கான இருக்கும் பாதுகாப்பான சாதனங்களை மூலம் தான் பார்க்க வேண்டும என அரசு மக்களை எச்சரித்துள்ளது. அதாவது டெலஸ்கோப் (Telescopes), பைனாகுலர், பாதுகாப்புக் கண்ணாடிகள், வெல்டிங் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். 

READ | கிரகணத்தின் போது கடைபிடிக்கப்படும் பல மூட நம்பிக்கைகள்...

ஒரு வெள்ளை அட்டையில் சூரியனின் உருப்பெருக்கிய படத்தை வெளிப்படுத்த தொலைநோக்கிகள் (Binoculars) அல்லது சிறிய தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படலாம்.

Trending News