பாலிவுட்: சமூக ஊடகங்களின் 'paid followers' திடுக்கிடும் மோசடி அம்பலம்

ஒருவரே 25 முதல் 50 சமூக ஊடக போலி கணக்குகளை வைத்து மோசடி செய்யும் திடுக்கிடும் மோசடி அம்பலம்!!! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2020, 06:42 PM IST
  • ஒரு like மற்றும் viewவுக்கு 50 காசுகள்
  • comment அல்லது retweet செய்வதற்கு ஒரு ரூபாய்
  • பதிவை வைரல் செய்வதற்கு,1 முதல் 3 லட்சம் ரூபாய்
  • பிரபலங்கள் ஒரு பதிவைப் பகிர அல்லது retweet செய்ய ஒன்று முதல் 2 லட்சம் ரூபாய்
பாலிவுட்: சமூக ஊடகங்களின் 'paid followers' திடுக்கிடும் மோசடி அம்பலம் title=

மும்பை: சமூக ஊடகங்களில் ஒருவரே 25 முதல் 50 போலி கணக்குகளை வைத்து மோசடி செய்யும் திடுக்கிடும் மோசடியை மும்பை போலீஸ் அம்பலப்படுத்தியது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சில குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் ப்ராக்ஸி சேவையகங்களை (proxy servers) பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினம். சமூக ஊடகங்களில் பிரபலங்களை பின்தொடர்பவர்களின் கணக்கை போலியாக உயர்த்தி காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.  

சமூக ஊடக தளங்களில் போலி பின்தொடர்பவர்களின் மோசடியை மும்பை போலீசார் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினர். அதுமட்டுமல்ல, likes, views, comments மற்றும் retweet செய்வதற்கு ஒருவருக்கு எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்ற rate card-ஐயும் மும்பை போலீசார் வெளியிட்டிள்ளனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவற்றிற்கு ஒரு like மற்றும் viewவுக்கு சமூக ஊடகங்களின் marketing agencies 50 காசுகள் வசூலிக்கின்றன. அதுவே ஒரு comment அல்லது retweet செய்வதற்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன.  இதுவே மொத்தமாக செய்யப்படும் போது விலை பேரத்திற்கு உட்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர, எந்தவொரு பதிவையும் வைரல் செய்வதற்கு, 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Read Also | பெண் வேடத்தில் களமிறங்கி கிளார்க்காக பணியாற்றும் எந்திரன் ரோபோ!!

சில சந்தர்ப்பங்களில், சமூகத்தில் செல்வாக்குள்ள நபர்களின் உதவியையும் பெற்றுக் கொள்கின்றனர். ஏற்கனவே ஏராளமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளவர்களுக்கும் பணம் கொடுத்து ஒரு விஷயத்தை வைரலாக்குகின்றனர். ஒரு பதிவைப் பகிர்ந்து கொள்ள அல்லது retweet செய்ய அவர்களுக்கு ஒன்று முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கப்படுகிறது.

இந்த ஏஜென்சிகளிடம் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களின் தரவுகளை வைத்திருக்கின்றன. தனிநபர்களை இழிவுபடுத்தவோ அல்லது வதந்திகள் அல்லது குறிப்பிட்ட செய்திகளைப் பரப்பவோ இந்த தரவுகள் பயன்படுத்துகின்றன.

பாலினம், வயது, மதம் மற்றும் அஞ்சல் குறியீட்டின் (gender, age, religion and postal code) அடிப்படையில் இந்த தரவுகள் பகுக்கப்பட்டு கிடைக்கின்றன. தேவைக்கேற்ப, target audienceகள் தொடர்பு கொள்ளப்படுகின்றனர்.  

ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அல்லது மீம்ஸை உருவாக்குவதற்கான விலை தனியானது. அப்படி உருவாக்கப்படுபவை  பிறகு வைரலாக்குவதற்கு தனி கட்டணம்…  

Read Also | பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?

பின்தொடர்பவர்களை (followers) அதிகரிப்பதற்கு நபர் ஒன்றுக்கு 5 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. உங்களுக்கு 50 லட்சம் followers வேண்டுமா? இரண்டரை  லட்சம் ரூபாய் இருந்தால் போதும்.   

சமூக ஊடகங்களில் ஒருவரே 25 முதல் 50 போலி கணக்குகளை வைத்து மோசடி செய்யும் திடுக்கிடும் மோசடியை மும்பை போலீஸ் அம்பலப்படுத்தியது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சில குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் ப்ராக்ஸி சேவையகங்களை (proxy servers) பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினம். சமூக ஊடகங்களில் பிரபலங்களை பின்தொடர்பவர்களின் கணக்கை போலியாக உயர்த்தி காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.  

Read Also | NASA Alert!... பூமியின் நோக்கி வரும் London Eye விட மிகப்பெரிய Asteroid.

பல பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் high profile builders என பலரும் சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக, தங்களுடைய followersஐ அதிகரிப்பதற்காக இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று மும்பை போலீசார் தெரிவிக்கின்றனர்.  

ஒரு சில சர்வதேச நிறுவனங்களும் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கியுள்ளார்.  'paid followers' மோசடியானது, நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று போலீசார் அஞ்சுகின்றனர். 

Trending News