புதுடெல்லி: உங்கள் ஐபோனை நீங்கள் இதுவரை ரீசெட் செய்ததில்லையா? ஆனால் தேவை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? கவலைப்பட வேண்டாம். மிகவும் எளிய செயல்முறைகள்...
ஒவ்வொரு ஐபோன் சாதனத்திலும், மீட்டமைக்கும் வழிமுறைகள் ஒரே மாதிரியானவைதான்... iPhoneஐ மீட்டமைப்பதற்கான எளிய வழிகாட்டி.
ஐபோன் 12
உங்கள் ஐபோனில் ஏதாவது சிக்கல் வருகிறதா? அல்லது சமீபத்திய iOS 15.4 மென்பொருளை அப்டேட் செய்ய விரும்புகிறீர்களா? இந்த இரண்டிலும், உங்கள் ஐபோனை அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைப்பது (iPhone to its factory settings) சிறந்ததாக இருக்கலாம்.
ஆனால் நீங்கள் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், iPhoneஇல் உள்ள முக்கியமான தரவுகள் அனைத்தையும் காப்புப் பிரதி எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தேவையான தரவுகளை தொலைத்துவிடலாம்.
இந்த எளிய வழிகாட்டியை பயன்படுத்தி ஐபோனை ரீசெட் செய்த பிறகு, உங்கள் விருப்பமான ஐபோன் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
மேலும் படிக்க | ஐபோன் முதல் சாம்சங் வரை அதிரடி ஆஃபரில் மொபைல்கள்
ஐபோனை எவ்வாறு மீட்டமைப்பது
உங்கள் ஐபோனை தொழிற்சாலை மீட்டமைக்கும் போது, முதலில் உங்கள் ஆப்பிள் ஐடி-இல் (Apple ID) இருந்து வெளியேற வேண்டும்.
காப்புப்பிரதி ஐபோன்
முதலில், உங்கள் ஐபோனில் உள்ள செட்டிங் (Settings)ஐத் திறந்து, பக்கத்தின் மேலே உள்ள உங்கள் பெயர் மற்றும் ஆப்பிள் ஐடியை சொடுக்கவும்.
ஆப்பிள் ஐடி பக்கத்தில் iCloud என்ற தெரிவு இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
அதில் உள்ள "iCloud காப்புப்பிரதி" (iCloud Backup) என்றத் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் படிக்க | ஆன்லைன் ஷாப்பிங்கில் குறைந்த விலையில் பச்சை நிற ஐபோன் 13
உங்கள் எல்லா தகவல்களையும் iCloud இல் காப்புப் பிரதி எடுக்க "இப்போது காப்புப் பிரதி எடுக்கவும்" (Back Up Now) என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
இந்த செயல்முறை முடிந்ததும், அமைப்புகள்> பெயர் மற்றும் ஆப்பிள் ஐடி> வெளியேறு ( Settings> Name and Apple ID> Sign Out) என்பதற்குச் சென்று உங்கள் ஆப்பிள் ஐடியிலிருந்து வெளியேறவும்.
இந்த சமயத்தில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டியிருக்கலாம். கடவுச்சொல்லை உள்ளிட்டு, 'அணைக்கவும்' (Turn Off) என்பதைத் தட்டவும்.
தொழிற்சாலை மீட்டமைப்பு
அமைப்புகள் > பொது > மீட்டமை, பின்னர் அனைத்து உள்ளடக்கம் மற்றும் அமைப்புகளை அழி (Settings > General > Reset > Erase All Content) என்பதைத் தட்டவும்.
உங்கள் கடவுக்குறியீட்டை (passcode) உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும், பின்னர் நீங்கள் அனைத்தையும் அழிக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
உறுதிப்படுத்த "அழி" (Erase) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஐபோனில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புகளைப் பொறுத்து செயல்முறை, சில நிமிடங்களை எடுக்கும்.
இந்த நடைமுறைகள் முடிந்ததும், உங்கள் சாதனம் மறுதொடக்கம் செய்யப்படும்.
மேலும் படிக்க | 2 மணி நேர சார்ஜில் 200 கிமீ செல்லும் Oben Rorr எலக்ட்ரிக் பைக்குகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR