உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய Whatsapp, Instagram மற்றும் Facebook!

உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2021, 08:44 AM IST
உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய Whatsapp, Instagram மற்றும் Facebook! title=

புதுடெல்லி: சமூக ஊடக தளமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் உடனடி மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர். இந்த தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 

ஃபேஸ்புக் (Facebook) நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் (Whatsapp) இந்திய நேரப்படி நேற்று இரவு 10:55 மணி அளவில் மெசஞ்சர் (Instagram) உள்ளிட்டவைகளின் சேவைகள் திடீரென முடங்கின. இதனால் பயனாளர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ALSO READ | இந்தியா சட்டங்களை மதித்தால் தான் இந்தியாவில் இடம்: Twitter, FB-க்கு எச்சரிக்கை

இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு 11:42 மணிக்கு சேவை சீரானது. வாட்ஸ் அப் முடங்கியது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் இதுவரை விளக்கம் ஏதும் தரப்படவில்லை.

 

 

இதேவேளை ட்விட்டர் (Twitter) செயலியை பயன்படுத்துவோர் பலரும், வாட்ஸ்அப் செயலி, இன்ஸ்டாகிராம் செயலி, ஃபேஸ்புக் சேவை முடங்கியதை பரவலாக விமர்சித்தும் அந்த தகவலை பகிர்ந்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். #whatsappdown, #instagramdown, #facebookdown என்ற பெயரில் ஹேஷ்டேக்கை பதிவிட்டு ட்விட்டர் பயனர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

ALSO READ | WhatsApp-ற்கு குட்டு வைத்த நீதிமன்றம்; மிகப்பெரிய நிறுவனமாக இருக்கலாம்.. ஆனால்....!!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News