ஆப்பிள் போன் அபிமானிகளுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. ஆப்பிள் நிறுவனம் தனது மலிவு விலை போனின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. ஆப்பிள் தனது மலிவு விலை ஐபோன் SE 2022 ஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ 43,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலை தற்போது இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.45,000 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய ஐபோன் SE மாடல்களின் சிறப்பம்சங்களில் 4.7-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் ஆகியவை அடங்கும். இந்த அமைப்பு ஐபோன் 13 தொடரையும் இயக்குகிறது. புதிதாக செய்யப்பட்ட விலை உயர்வு இப்போது ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவில் லைவ் ஆக உள்ளது.
Apple iPhone SE 2022 விலை உயர்வு
ஆப்பிள் ஐபோன் SE ரூ. 43,900 (64 ஜிபி) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இப்போது ரூ 49,900 க்கு கிடைக்கிறது. 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை முன்னர் ரூ.48,900 ஆக இருந்தது. தற்போது ரூ.54,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 256ஜிபி மாறுபாட்டின் விலை இப்போது ரூ.64,900 ஆக உள்ளது. ஐபோன் மாடல் மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் பிராடக்ட் (சிவப்பு) வண்ணங்களில் கிடைக்கிறது.
ஐபோன் SE 2022 இன் விலைகள் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என பயனர்கள் வியந்து வருகிறார்கள். எனினும், இதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனினும், குரோமா மற்றும் ஃபிளிப்கார்ட்டில் இன்னும் பழைய விலையே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட்டில் நடந்து வரும் பிக் தீபாவளி விற்பனையின் போது, பல ஐபோன்கள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆப்பிள் ஐபோன் 13 64,990 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 59,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 256ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.67,990 ஆகவும் 512ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.86,990 ஆகவும் உள்ளது.
Apple iPhone SE 2022 விவரக்குறிப்புகள்
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 அலுமினியம் சேஸ் மற்றும் கிளாஸ் பேக் உடன் 4.7 இன்ச் ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் ஒரு பிசிக்கல் ஹோம் ஸ்க்ரீன் உள்ளது. இதில் ஒரு கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடரின் வரையறுக்கும் அம்சங்களில் ஒன்றாகும். இது IP67 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு பூச்சுடன் (டஸ்ட் அண்ட் வாடர் ரெசிஸ்டண்ட் கோடிங்குடன்) வருகிறது. இது அவ்வப்போது போனில் படும் நீர் துளிகள் மற்றும் தூசிலிருந்து போனை பாதுகாக்கும்.
Apple iPhone SE 2022 கேமரா
ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் நிறுவனத்தின் ஐபோன் 13 தொடரையும் இயக்குகிறது. இந்த சிப்செட் 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி iOS 15 இல் இயங்குகிறது. கேமரா முன்புறத்தில், ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட் எஹ்டிஆர் 4, ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைல், டீப் ஃப்யூஷன் மற்றும் போர்ட்ரெய்ட் மோட் போன்ற அம்சங்களுக்கான ஆதரவுடன் பின்புறத்தில் ஒற்றை 12எம்பி கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி இணைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் திறன்களுடன் வலுவான பேட்டரியும் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ