Air Dresser: COVID-19-க்கு எதிராக உங்கள் துணிகளைப் பாதுகாக்க Samsung-ன் புதிய அறிமுகம்

சாம்சங்கின் இந்த ஏர் டிரஸ்ஸரில் ஜெட் ஏர் சிஸ்டம் உள்ளது. இதனுடன், 3 ஏர் ஹேங்கர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் துணிகளை எளிதில் உலர்த்த முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2020, 02:31 PM IST
  • கோவிட் காலத்தில் Samsung ஒரு சிறந்த சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • Air Dresser-ன் உதவியுடன் வாடிக்கையாளர்கள் ஆடைகளை சுத்திகரிக்கலாம்.
  • எளிமையான முறையில் ஆடைகளை கிருமி தொற்றிலிருந்து காக்கலாம்.
Air Dresser: COVID-19-க்கு எதிராக உங்கள் துணிகளைப் பாதுகாக்க Samsung-ன் புதிய அறிமுகம்  title=

உலகம் முழுவதும் COVID-19 தொற்றுநோயின் பிடியில் சிக்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த பல வித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இக்கட்டான சேரத்தில் Samsung ஒரு ஒரு சிறந்த சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் கொரோனா வைரசின் கொட்டத்தை அடக்குவதில் துணை புரியும் என நிறுவனம் கூறுகிறது.

தென் கொரிய (South Korea) நிறுவனமான Samsung தனது உயர் தொழில்நுட்ப ஆடை பராமரிப்பு சாதனமான 'ஏர்டிரெசர்'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ .1.10 லட்சமகும். இந்த சாதனத்தின் உதவியுடன், தூசி, மாசு மற்றும் கிருமிகளை துணிகளிலிருந்து அகற்றலாம்.

UV Sterliser

COVID-19 காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்கும் நேரத்தில் Samsung வாடிக்கையாளர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. Samsung இந்த ஆண்டின் தொடக்கத்தில் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட UV Sterliser-ஐ அறிமுகப்படுத்தியது.

ALSO READ: மூன்று புதிய WhatsApp அம்சங்கள் 2021 இல் அறிமுகமாகிறது!

Dry Cleaner

Air Dresser-ன் உதவியுடன் வாடிக்கையாளர்கள் இப்போது விரைவாகவும் எளிதாகவும் தங்கள் ஆடைகளை வெளியே அணிந்து செல்லும் வகையில் தயார் செய்ய முடியும் என்றும் அடிக்கடி தோய்க்கவோ சலவைக்கு போடவோ தேவை இருக்காது என்றும் Samsung தெரிவித்துள்ளது.

Jet Air System

சாம்சங்கின் இந்த ஏர் டிரஸ்ஸரில் ஜெட் ஏர் சிஸ்டம் உள்ளது. இதனுடன், 3 ஏர் ஹேங்கர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் துணிகளை எளிதில் உலர்த்த முடியும். துணிகளை ஹேங்கரில் தொங்கவிட்ட பிறகு, இந்த சாதனம் துணிகளை முழுமையாக சுத்தம் செய்யும். துணிகளை சுத்தம் செய்வதைத் தவிர, அவற்றில் மறைந்திருக்கும் கிருமிகளையும் இது அகற்றும் என்று Samsung கூறியுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த இயந்திரத்திலிருந்து வரும் ஒலி மிகவும் குறைவாகவே உள்ளது.

No Cost EMI

துவக்க கட்டத்தில், Samsung, இந்த சாதனத்திற்கு 10000 ரூபாய் தள்ளுபடி அளிக்கிறது. அதாவது, இந்த இயந்திரத்தை 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கலாம். நீங்கள் அதை 18 மாதங்களுக்கான No Cost EMI-யிலும் வாங்கும் வசதி உள்ளது. இந்த ஏர் டிரஸ்ஸரை Samsung ஸ்டோர் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து வாங்கலாம். இது டிசம்பர் 24, 2020 முதல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்.

ALSO READ: PUBG Update: பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News