Google நிறுவனத்திற்கு ரூ 135.86 கோடி அபராதம்!

உலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுதல் ஜாம்பவான் கூகிள்-க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது!

Last Updated : Feb 8, 2018, 09:09 PM IST
Google நிறுவனத்திற்கு ரூ 135.86 கோடி அபராதம்! title=

உலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுதல் ஜாம்பவான் கூகிள்-க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது!

பிரபல திருமண சேவை வலைதளமான மேட்ரிமோனி.காம் (matrimony.com) பதிவுசெத்த வழக்கின் அடிப்படையில் கூகிள் நிறுவனத்திற்கு சுமார் 135.86 கோடி அபராதம் விதத்து "காப்பிடேஷன் கமிஷன் ஆப் இந்தியா(CCI)" உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான அல்பேபர்ட் இன்க் நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகுள் இணையத்தள தேடல் மற்றும் ஆன்லைனில் தேடல் விளம்பர சந்தைகளில் matrimony.com இணையத்தின் ஆதிக்கத்தினை குறைத்து காட்டியதாக தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

"கூகிள் தேடல்களின் நடைமுறைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது, அவ்வாறு செய்வதன் மூலம், அதன் போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது எனவும்," CCI தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News