₹ 100 கோடி மதிப்பிலான எஞ்சின் இல்லா ரயில் Train 18 அறிமுகம்....

சுமார் 100 கோடி மதிப்பிலான எஞ்சின் இல்லா ரயில் என வர்ணிக்கப்படும் டிரெயின் 18 டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது! 

Last Updated : Oct 29, 2018, 11:27 AM IST
₹ 100 கோடி மதிப்பிலான எஞ்சின் இல்லா ரயில் Train 18 அறிமுகம்.... title=

சுமார் 100 கோடி மதிப்பிலான எஞ்சின் இல்லா ரயில் என வர்ணிக்கப்படும் டிரெயின் 18 டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது! 

டெல்லி: மின் வழித்தடத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ரயில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தில் முழுமையாக சென்னை ஐ.சி.எஃப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், சதாப்தி ரயிலுக்குப் பதில் பயன்படுத்தப்படவுள்ளது.

முழுமையான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் 16 பெட்டிகள் சேர்கார் வசதியுடனும், 2 பெட்டிகள் எக்சிக்யூட்டிவ் சேர் கார் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எக்சிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் சுழலும் வசதியுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகிய உள்வடிவமைப்பு,  WIFI, ஜி.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ள இந்த ரயில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

சில மார்க்கங்களில் சோதனை ஒட்டத்துக்குப் பின் இந்த ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Trending News