குறைந்த விலையில் ரெட்மீ மாடல் கிடைப்பதால் மார்கெட்டில் செம டிமாண்ட்

கண்ணாடி வடிவமைப்பு கொண்ட ரெட்மி போன் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் முதல் கட்ட விற்பனையில் மார்க்கெட்டில் செம டிமாண்டை உருவாக்கியிருக்கிறது ரெட்மீயின் புதிய மொபைல்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 17, 2023, 08:37 PM IST
  • மீண்டும் விற்பனைக்கு வந்த ரெட்மீ
  • இப்போது வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி
  • மொபைலுக்கு மார்க்கெட்டில் செம டிமாண்ட்
குறைந்த விலையில் ரெட்மீ மாடல் கிடைப்பதால் மார்கெட்டில் செம டிமாண்ட் title=

Xiaomiயின் ஸ்மார்ட்போன்களை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். Xiaomi தனது Redmi சீரிஸ் போன்களை பட்ஜெட் வரம்பில் வழங்குகிறது. அத்துடன் நிறுவனம் பல சிறப்பு அம்சங்களையும் சேர்த்து வழங்குகிறது. இந்த தொடரில், நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 12-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மாடலுக்கு தான் அதிக தேவை எழுந்துள்ளது. Redmi 12 கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மார்க்கெட்டில் இல்லாத போனாகவும் இது மாறியிருக்கிறது. இதனால் சியோமி நிறுவனம் Flipkart-ல் ஒரு பேனரை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | Jio offers: ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்க ஜியோவின் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டம்!

அதில் தொலைபேசி மீண்டும் ஃபிளாஷ் விற்பனைக்கு கிடைக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இவ்வளவு டிமாண்ட் காரணமாக மார்க்கெட்டில் கிடைக்காத சியோமியின் ரெட்மீ 12 இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இப்போது இந்த போனை வாங்கும் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1500 தள்ளுபடி பெறலாம். இதற்கு நீங்கள் ஐசிஐசிஐ வங்கி அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. Redmi 12-ன் ஆரம்ப விலை 8,999 ரூபாய். Redmi 12 4G இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு மற்றும் மற்றொன்று 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு மாதிரி. குறைந்த விலையில் 50 மெகாபிக்சல் கேமரா இருப்பது இந்த போனின் சிறப்பு.

அம்சங்கள் மலிவான விலையில் சிறப்பு

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இந்த ஃபோன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெசல்களுடன் பஞ்ச்-ஹோல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த 4ஜி போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. செல்ஃபிக்கு 8 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது. இது வெளிர் நீலம், மூன்ஷைன் வெள்ளி மற்றும் ஜேட் கருப்பு ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. ரெட்மியின் இந்த 4ஜி ஃபோனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. போனின் எடை சுமார் 198.5 கிராம்.

மேலும் படிக்க | விவோ விநாயக சதுர்த்தி சலுகை: இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8,500 வரை தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News