Realme ஃபோன் பார்த்து பீதியில் இருக்கும் சாம்சங்! அச்சச்சோ! அவ்வளவு அழகா...

Realme இந்தியா, Realme 11 5G-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. அதனுடைய டிசைன் செம அழகாக இருப்பதால் சாம்சங் நிறுவனத்துக்கு பீதியை கிளம்பியிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2023, 08:41 PM IST
  • ரியல் மீயின் புதிய மொபைல்
  • இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  • பீதியில் சாம்சங் மார்க்கெட்
Realme ஃபோன் பார்த்து பீதியில் இருக்கும் சாம்சங்! அச்சச்சோ! அவ்வளவு அழகா... title=

ஸ்மார்ட்போன் மார்க்கெட் மிகவும் போட்டியிருக்கும் ஒரு சந்தையாக இருக்கிறது. ஆனாலும், அனைத்து நிறுவனங்களும் மாதம் மாதம் புதிதாக ஒரு மொபைலை இறக்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவரிசையில் விரைவில் ரியல்மீ நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் Realme 11 5G-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. தைவானில் நிறுவனம் அறிமுகப்படுத்திய அதே போன் இதுதான். டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தொலைபேசியின் வெளியீட்டு டைம் லைனை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், இந்த மாதம் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்றும், பல அற்புதமான அம்சங்கள் இந்த போனில் கிடைக்கும் என கூறியுள்ளார். Realme 11 5G பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்...

மேலும் படிக்க | Amazon Great Freedom Festival Sale: இதில் எல்லாம் 80% வரை தள்ளுபடி... வாங்க தயாரா?

Realme 11 5G வெளியீட்டு தேதி

டிப்ஸ்டர் அபிஷேக்கின் சமீபத்திய ட்வீட் படி, Realme 11 5G அடுத்த 10 நாட்களுக்குள், ஒருவேளை ஆகஸ்ட் 12 க்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போன் ஏற்கனவே தைவானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அங்கு பெறப்பட்டிருக்கும் வரவேற்பை அடுத்து இந்திய மார்க்கெட்டை இந்த மொபைல் குறி வைத்திருக்கிறது. இது சாம்சங்க் நிறுவனத்தின் புதிய மொபைலுக்கு கடும் சவாலை விற்பனையில் கொடுக்கும் என்று யூகிக்கப்பட்டுள்ளது.

Realme 11 5G விவரக்குறிப்புகள்

Realme 11 5G ஆனது பெரிய 6.72-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளேவுடன் 680 nits பீக் பிரகாசத்துடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளேவில் வசதியான 120Hz புதுப்பிப்பு வீத விசையும் கிடைக்கிறது, இது பயனர்களுக்கு மென்மையான மற்றும் சுறுசுறுப்பான அனுபவத்தை வழங்குகிறது. இந்தச் சாதனத்தை இயக்க, MediaTek Dimensity 6100+ SoC பயன்படுத்தப்பட்டது, இது மேம்பட்ட TSMC 4nm செயல்முறையிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது 2.2GHz அதிகபட்ச கடிகார வேகத்துடன் 2X Arm Cortex-A76 கோர்களையும், 2.0GHz அதிகபட்ச கடிகார வேகத்துடன் 6X Arm Cortex-A55 கோர்களையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல்லின் அதிரடி ஆபர்கள்! 5ஜி டேட்டா முற்றிலும் இலவசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News