இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எலக்டிரிக் கார் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு எதிரான அரசுகள் எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக ஆட்டோமொபைல் துறையினர் எலக்டிரிக் வாகன உற்பத்தியில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்டும் வகையில், இத்தகைய ஊக்குவிப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க | வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி
இதனை அறிந்துகொண்ட அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் துறையினர் தங்களை அப்டேட் செய்து கொள்வதிலும், இந்த துறையில் கால்பதித்து மிகப்பெரிய மார்க்கெட்டை தன்வசப்படுத்தும் நோக்கிலும் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். இதற்காக புதிய புதிய அப்டேட்டுகளை நாள்தோறும் சந்தையில் அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, டெஸ்லா மற்றும் ஓலா நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்தியில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர்.
விரைவில் எலக்டிரிக் கார் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ள ஓலா நிறுவனம், அந்தக் காருக்கு ஓட்டுநர் தேவையில்லை என்றும் அதிரடியாக கூறியுள்ளது. Ola தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் பேசும்போது, ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ஓலாவின் புதிய எலக்டிரிக் கார் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதில் கிடைக்கும் சில ஆலோசனைகளின் அடிப்படையில் கார் இயக்கத்தில் சில மேம்பாடுகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ள அவர், அவை அனைத்தும் நிறைவடைந்தவுடன் இந்திய சந்தையில் 2 ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
எலக்டிரிக் கார் தானியங்கி ஓட்டுநர் அம்சம் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலக மார்க்கெட்டையும் கருத்தில் கொண்டே இந்த கார்களை ஓலா உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார். ஓலாவின் இந்த அறிவிப்பு போட்டி நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR