குளிர்காலத்தில் யாரும் ஏர் கண்டிஷனரை வாங்குவதில்லை, உண்மையில் ஹீட்டர்களுக்கு அதிகம் டிமாண்ட் உள்ள குளிர்காலத்தில் எப்படி ஏசி வாங்க முடியும்? நீங்களும் இன்றுவரை இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் சேமிக்கவும். ஏனென்றால், இந்த சீசனில் ஏசி வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொண்டால், கட்டாயம் நீங்களும் ஏசி வாங்குவீர்கள். எனவே இதன் முழு விவரத்தை இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஏன் ஆஃப் சீசனில் ஏசி வாங்குவது நன்மை பயக்கும்
உண்மையில், இந்த சீசனில் குளிர் அதிகமாக இருப்பதால், ஏசி விலை குறைகிறது, ஏனெனில் அதன் தேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது, விலையுயர்ந்த குளிரூட்டிகளை விற்க, நிறுவனங்கள் அவற்றின் விலையை கடுமையாகக் குறைக்கின்றனர். அதன்படி நீங்கள் இந்த சீசனில் ஏசி வாங்க பிளான் செய்கிறீர்கள் என்றால், ₹ 20000 முதல் ₹ 30000 வரை எளிதாக சேமித்து வாங்கலாம்.
எந்த ஏர் கண்டிஷனரில் தள்ளுபடி இருக்கிறது
சாம்சங்கின் 1.5 டன் 5 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசியில் தள்ளுபடி வழங்கப்படுகிறது, இந்த ஏர் கண்டிஷனரின் விலை ரூ.65,990 என்றாலும், 43 சதவீதம் தள்ளுபடி இதில் வழங்கப்படுகிறது, அதன் பிறகு வாடிக்கையாளர்கள் இதை ரூ.36,999க்கு வாங்கலாம். இந்த தள்ளுபடி உங்களை நிறைய சேமிக்க முடியும்.
விண்டோ ஏசி அல்லது ஸ்ப்ளிட் ஏசி
ஸ்ப்ளிட் ஏசியை விட விண்டோ ஏசியின் விலை மலிவாக இருக்கும். விண்டோ ஏசி ஒரே வடிவில் எல்லாம் அடங்கியதாக இருக்கும். ஸ்ப்ளிட் ஏசி இரண்டு பகுதிகளாக ஒன்று உள்ளும் மற்றொன்று வெளியேயும் வைக்கப்படும். எதுவாயினும் ஏதுவான காற்றோட்டம் தேவை.
மேலும் படிக்க | வெறும் 107 ரூபாய்க்கு ரீசார்ஜ்...40 நாட்கள் வேலிடிட்டி..அசத்தும் பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ