இனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்!

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா-வில் இணையதளம் மூலம் விலகுகளில் நேரடி செயல்களை நேரடியாக ஒளிபரப்ப (Live streaming) வசதி அறிமுகம்!

Last Updated : Apr 15, 2018, 01:41 PM IST
இனி வண்டலூர் ஜூ விலங்குகளை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்! title=

சென்னை: வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா-வில் இணையதளம் மூலம் விலகுகளில் நேரடி செயல்களை நேரடியாக ஒளிபரப்ப (Live streaming) வசதி அறிமுகம்! 

வண்டலூர் உயிரியல் பூங்கா-வை காண பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டவர்களும் அதிகமாக வர துவங்கியிள்ளனர். பார்வையாளர்களை கவரும் வகையில் தற்போது பூங்கா நிர்வாகம் ஆன்லைன் மூலம் Live streaming வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.  

இந்த முறை மூலம், சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்லைன் மூலம் காணமுடியும். ஓரிரு நாட்களில் யானை, வெள்ளை புலி, வங்க புலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளை https://www.aazp.in/live-streaming/ என்ற இணையத்தில் நேரடியாக காணலாம்.

அதுமட்டும் இன்றி, முதலில் பூங்காவை பார்வையிட வரும் பார்வையாளர்கள் தங்கி பூங்காவை சுற்றி பார்க்க அனுமதி இல்லை. அனால் தற்போது, பார்வையாளர்கள் இரவில் பூங்காவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. 

தங்குவதற்கான முன்பதிவுகளையும் பூங்காவின் இணையதளமான https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் காணலாம். 

தங்குவதற்கான கட்டணங்களின் விவரம்....! 

இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 + GST. 

குழந்தைகளுக்கு ரூ.500 + GST. 

Trending News