பிரபல போன் பிராடான நோக்கியா தனது 5ஜி ஸ்மார்ட்போனை மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு நோக்கியா எக்ஸ்30 5ஜி (Nokia X30 5G ) என்று பெயரிடப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மார்ட்போனின் விவரங்களை அறிவித்துள்ளது. இந்த போனின் விலை தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில், வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படும்.
சமீபத்திய தகவல்களின்படி, நோக்கியா X30 5G பிப்ரவரி 20 அன்று அறிமுகப்படுத்தப்படும் என தோன்றுகிறது. நோக்கியா X30 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Nokia X30 5G
Nokia X30 5G தொலைபேசியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற்றிருக்கும். இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் 100 சதவீதம் அலுமினியம் மற்றும் 65 சதவீதம் பிளாஸ்டிக்கால் ஆனது.
It's sustainable, it's durable and it's coming soon. Stay tuned for the all new Nokia X30 5G.#NokiaX305G #PlayTheLongGame pic.twitter.com/XVIlLu12uh
— Nokia Mobile India (@NokiamobileIN) February 14, 2023
மேலும் படிக்க | Nokia T21 ரிவ்யூ: தரமான பேட்டரி பேக், நோக்கியாவின் அசத்தல் டேப்லெட்
Nokia X30 5G: விவரக்குறிப்புகள்
நோக்கியா X30 5G ஸ்னார்ட்போன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.4-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போனின் ஸ்க்ரீன் கைரேகை ஸ்கேனருடன் (ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனருடன்) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதில் IP67-சான்றளிக்கப்பட்ட நீர்ப்புகா அம்சம் உள்ளது.
Nokia X30 5G: கேமரா மற்றும் பேட்டரி
நோக்கியா X30 5G- இல் இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதில் 50MP முதன்மை மற்றும் 13MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்கள் உள்ளன. மேலும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஃபோனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரி உள்ளது. உலக சந்தையில் நோக்கியா எக்ஸ்30 5ஜியின் விலை $529 (ரூ.43,828) ஆகும்.
மேலும் படிக்க | சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ