அறிமுகத்துக்கு முன் கசிந்தன Nokia G50 போனின் விவரங்கள்: அட்டகாச அம்சம், அசத்தல் ஸ்டைல்!!

நோக்கியா ஜி 50 ப்ளூ மற்றும் மிட்நைட் சன் நிறங்களில் அறிமுகம் ஆகக்கூடும். இன்ஸ்டாகிராம் இடுகையில் தொலைபேசி 5 ஜி இணைப்புடனும், மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை வழங்கும் என்பது உறுதியானது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2021, 12:29 PM IST
  • HMD குளோபல் நோக்கியா G50 ஐ வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும்.
  • நோக்கியா ஜி 50 மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.
  • தொலைபேசியின் வடிவமைப்பு தற்போதுள்ள நோக்கியா ஜி 10 மற்றும் நோக்கியா ஜி 20 போல இருக்கும் என தெரிகிறது.
அறிமுகத்துக்கு முன் கசிந்தன Nokia G50 போனின் விவரங்கள்: அட்டகாச அம்சம், அசத்தல் ஸ்டைல்!! title=

Nokia G50: Nokia G50 போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னால் தற்செயலாக ஃபின்னிஷ் நிறுவனத்தால் அது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. புதிய நோக்கியா போனான Nokia G50 ஒரு புதிய, மாறுபட்ட மாடலாகத் தெரிகிறது. தற்போதுள்ள இரண்டு மாடல்களான நோக்கியா ஜி 10 மற்றும் நோக்கியா ஜி 20 ஆகியவற்றின் அம்சங்களும் இதில் இருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகின்றது. 

இந்த போன், இரண்டு வெவ்வேறு வண்ணங்கள், வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாகத் தெரிகிறது. Nokia G50, நோக்கியா ஸ்மார்ட்ஃபோன் போர்ட்ஃபோலியோவில் மிகவும் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது. இது இரண்டு வெவ்வேறு ஸ்டோரேஜ் வகைகளில் வரக்கூடும்.

நோக்கியா ஜி 50 விவரங்கள் கசிந்தன

பிரான்சில் உள்ள நோக்கியா (Nokia) மொபைல் இன்ஸ்டாகிராம் கணக்கு, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு இடுகையின் மூலம் நோக்கியா ஜி 50 பற்றிய தகவல்களை கசியச் செய்தது. ஆன்லைனில் புகாரளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இடுகை அகற்றப்பட்டாலும், NokiaMob.net ஸ்கிரீன் ஷாட்களையும், விவரங்களை உள்ளடக்கிய வீடியோ டீசரையும் சேமித்து விட்டது. இடுகையின் படி, தொலைபேசியை முழு சார்ஜ் செய்தபின், ஒரு நாள் முழுவதும் இடைவிடாமல் இயக்க முடியும். அதாவது, அதன் பேட்டரி மிகவும் வலுவாக இருக்கும்.

Nokia G50

48 எம்பி கேமரா இருக்கும்

நோக்கியா ஜி 50 ப்ளூ மற்றும் மிட்நைட் சன் நிறங்களில் அறிமுகம் ஆகக்கூடும். இன்ஸ்டாகிராம் இடுகையில் தொலைபேசி 5 ஜி இணைப்புடனும், மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை வழங்கும் என்பது உறுதியானது.

ALSO READ: Vivo பயனர்களுக்கு மாஸ் Surprise; 50MP கேமராவுடன் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி 50 மிகவும் மலிவு விலையில் இருக்கும்

தொலைபேசியின் (Mobile Phone) வடிவமைப்பு தற்போதுள்ள நோக்கியா ஜி 10 மற்றும் நோக்கியா ஜி 20 போல இருக்கும் என தெரிகிறது. முன்புறத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்பிளே நாட்ச் மற்றும் பின்புறத்தில் கிரேடியண்ட் ஃபினிஷ் உள்ளது. 

நோக்கியா ஜி 50 பற்றி எச்எம்டி குளோபல் இன்னும் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இருப்பினும், சில முந்தைய அறிக்கைகள் போன் மிகவும் மலிவான 5G நோக்கியா மாடலாக இருக்கலாம் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் SoC இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளன. நோக்கியா G50 ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஜி 50-யின் விலை

நோக்கியா ஜி 50, இங்கிலாந்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் GBP 207 க்கு (தோராயமாக ரூ 11,000) கிடைக்கும். அதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆஸ்திரேலியாவில் AUD 477 க்கு (தோராயமாக ரூ. 25,400) கிடைக்கும்.

எச்எம்டி குளோபல் விரைவில் நோக்கியா ஜி 50 ஐ அறிமுகப்படுத்த உள்ளது

HMD குளோபல் (HMD Global) நோக்கியா G50 ஐ வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும். அறிமுகம் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் ஹெச்எம்டி குளோபல் ஒரு அதிகாரப்பூர்வ கூட்டாளியாக இருக்கும், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' படம் வெளிவருவதற்கு முன்பே தொலைபேசி அறிமுக ஆகக்கூடும். இந்த படம் செப்டம்பர் 28 அன்று ப்ரீமியர் செய்யப்பட்டு செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளிவரும்.

ALSO READ: பாதி விலையில் புதிய 5G ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு: முழு விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News