சிம் கார்டு ஸ்வாப்பில் இது புது டெக்னிக்! உஷார் மக்களே

சிம் கார்டு ஸ்வாப் டெக்னிக்கில் சிக்கினால், உங்கள் சிம் கார்டு ஒரே நொடியில் மற்றொருவரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இதனை தடுப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 20, 2024, 05:38 PM IST
  • சிம் கார்டு ஸ்வாப் எனும் மோசடி
  • உஷாராக இல்லையெறால் சிக்கல்
  • முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?
சிம் கார்டு ஸ்வாப்பில் இது புது டெக்னிக்! உஷார் மக்களே title=

இப்போதெல்லாம் சிம் ஸ்வாப் ஸ்கேம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய வகை மோசடி வெளிவந்துள்ளது. இதில், மோசடி செய்பவர் உங்கள் மொபைல் எண்ணை திருடி, அதில் வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளை தனது சிம் கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கு, சமூக ஊடகங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கான லாகின் தகவல்களையும் பெறலாம். இதன் மூலம், மோசடி செய்பவர் உங்களை ஏமாற்றலாம், உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவைத் திருடுவதன் மூலம் உங்களை அச்சுறுத்தலாம். ஆனால், சில முன்னெச்சரிக்கை வழிகளை பின்பற்றுவதன் மூலம் இந்த சிம் ஸ்வாப் மோசடியைத் தவிர்க்கலாம். அதனால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஜியோவின் 3 மாத பிளான் விலை குறைஞ்சிருச்சா? டேட்டா, லிமிட் இல்லாத அழைப்பு.. இன்னும் பல ஆச்சரியங்கள்

சிம் ஸ்வாப் மோசடியைத் தவிர்ப்பதற்கான வழிகள்

வலுவான பாஸ்வேர்டு உருவாக்கவும் -

ஒவ்வொரு ஆன்லைன் கணக்கிற்கும் வெவ்வேறு மற்றும் வலுவான கடவுச்சொல்லை உருவாக்கவும். அவற்றை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருங்கள். பிறந்தநாள் அல்லது மொபைல் எண்கள் போன்ற எளிய வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டாம்.

சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் - 

தெரியாத எண் அல்லது இமெயிலில் இருந்து பெறப்பட்ட எந்த இணைப்பையோ அல்லது பைல்களையோ திறக்க வேண்டாம். அனுப்புநரின் அடையாளத்தை கவனமாகச் சரிபார்க்கவும்.

உங்கள் கணக்கை கண்காணிக்கவும்-

உங்கள் வங்கி, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தொடர்ந்து சரிபார்க்கவும். ஏதேனும் தவறு நடந்தால் உங்களுக்குத் தெரிவிக்க Alerts ஆப்சன்களை இயக்கவும்.

மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் -

உங்கள் கணக்கில் பின் அல்லது பாஸ்வேர்டுகளை அமைக்க உங்கள் மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். சில நிறுவனங்கள் சிம் மாற்றத்தை முற்றிலுமாக நிறுத்தும் வாய்ப்பையும் வழங்குகின்றன.

உங்கள் அடையாளத்தை பாதுகாக்க -

உங்கள் தனிப்பட்ட தகவலைக் கண்காணிக்கும் சேவைகளைப் பயன்படுத்தவும். அவை மோசடிக்கான வாய்ப்பு ஏதேனும் இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும்.

சந்தேகத்திற்கிடமான செயலி மீது புகார்

உங்கள் சிம் மாற்றப்பட்டதாக நீங்கள் நம்பினால், உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க உடனடியாக உங்கள் மொபைல் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். உங்கள் வங்கி மற்றும் பிற முக்கிய நிறுவனங்களுக்கும் தெரிவிக்கவும். மேலும், உங்கள் மொபைலில் சந்தேகத்திற்கு இடமான செயலிகள் இருந்தால் அது குறித்து கவனம் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News