Netflix அளித்த ஷாக்: மலிவு விலை பிளானில் இந்த வசதி கிடைக்காது

Netflix Cheapest Plan: நெட்ஃபிக்ஸ் அதன் மலிவான திட்டங்களை விட மலிவான மற்றொரு திட்டத்தை கொண்டு வரவுள்ளது என பல நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. அந்த செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2022, 05:01 PM IST
  • நெட்ஃப்ளிக்ஸின் மலிவான சந்தா திட்டம்.
  • இந்த அத்தியாவசிய அம்சம் இந்த திட்டத்தில் கிடைக்காது.
  • இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் 200,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது.
Netflix அளித்த ஷாக்: மலிவு விலை பிளானில் இந்த வசதி கிடைக்காது title=

நெட்ஃப்ளிக்ஸ் மலிவான விளம்பர ஆதரவு சந்தா திட்டத்தின் குறைபாடு: ஓடிடி உள்ளடக்கத்தின் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த தளங்கள் சினிமாவுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளன. நெட்ஃபிக்ஸ் அதன் மலிவான திட்டங்களை விட மலிவான மற்றொரு திட்டத்தை கொண்டு வரவுள்ளது என பல நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. அந்த செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். நெட்ஃபிக்ஸ் தனது இந்த திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த மலிவான திட்டத்தை பெறும் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸின் முக்கியமான அம்சத்தைப் பெறாமல் போகலாம். இது வாடிக்கையாளர்களை கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திட்டம் மற்றும் அதன் குறைபாடுகள் பற்றி விரிவாகக் காணலாம். 

நெட்ஃப்ளிக்ஸின் மலிவான சந்தா திட்டம்

ஓடிடி இயங்குதளமான நெட்ஃபிக்ஸ் மூலம் ஒரு புதிய மற்றும் மிகவும் மலிவான சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் இது வரும் காலத்தில் இந்தியாவிலும் வெளியிடப்படும். இந்தத் திட்டத்தின் விலையைக் குறைக்க, நெட்ஃப்ளிக்ஸ் உள்ளடக்கத்திற்கு இடையே விளம்பரங்களைக் கொண்டு வரலாம். அதாவது நெட்ஃப்ளிக்ஸின் மலிவான திட்டமானது விளம்பர ஆதரவுத் திட்டமாக இருக்கும்.

மேலும் படிக்க | Whatsapp புதிய அம்சம்: இனி இதை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, பாதுகாப்பு பலமானது

இந்த அத்தியாவசிய அம்சம் இந்த திட்டத்தில் கிடைக்காது

சமீபத்திய தகவல்களின்படி, நெட்ஃப்ளிக்ஸின் புதிய, மலிவான விளம்பர ஆதரவு திட்டத்தை பெறும் பயனர்கள், தளத்தின் அத்தியாவசிய அம்சத்தைப் பெறமாட்டார்கள். டெவலப்பர் ஸ்டீவ் மோஸின் கூற்றுப்படி, நெட்ஃபிளிக்ஸ் சந்தா ஒரு துணை நிரலுடன் பயனர்களுக்கு ஆஃப்லைன் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கான விருப்பத்தை வழங்காது. அதாவது, நீங்கள் எந்த நிகழ்ச்சியின் எபிசோடுகள் அல்லது திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் பயன்முறையில் பார்க்க முடியாது. எனினும், இந்த விவரம் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சில காலத்திற்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் உடன் கைகோர்த்துள்ளதாகவும், மைக்ரோசாப்ட் இந்த திட்டத்திற்காக நெட்ஃபிளிக்ஸின் தொழில்நுட்பம் மற்றும் விற்பனை பங்குதாரராக இருப்பதாகவும் அறிவித்தது. இந்த திட்டத்தின் விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த திட்டம் 2022 இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் 200,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது என்பதும் இந்தச் சூழ்நிலையை மேம்படுத்தும் முயற்சியாக இந்த விளம்பர ஆதரவு சந்தாத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அமேசான் பிரைம் vs நெட்பிளிக்ஸ்: பெஸ்ட் இது தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News