இந்தியா முழுவதும் மொபைல் பேங்கிங்கை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மிகவும் எளிமையாக இருப்பதால் ஹோட்டல் பில் முதல் மொபைல்போன் பில் வரை அனைத்தையும் மொபைல் வழியாகவே செலுத்திவிடுகின்றனர். இதனை இப்போது ஒரு ட்ரோஜன் வைரஸ் குறி வைத்திருக்கிறது. SOVA என்ற அந்த வைரஸ், ஆண்ட்ராய்டு போனை திருட்டுத்தனமாக என்க்ரிப்ட் செய்துவிடும். இதனுடைய நிறுவலை நீக்குவது கடினம்.
இந்த வைரஸ் தற்போது இந்திய வாடிக்கையாளர்களை குறிவைத்துக் கொண்டிருப்பதை ஃபெடரல் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி எச்சரித்துள்ளது.
ஜூலை மாதம் இந்திய சைபர்ஸ்பேஸில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வைரஸ் அதன் ஐந்தாவது பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. SOVA ஆண்ட்ராய்டு ட்ரோஜனைப் பயன்படுத்தி, புதிய வகை மொபைல் பேங்கிங் மால்வேர் அட்டாக்கிற்கு, இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என CERT-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீம்பொருளின் முதல் பதிப்பு செப்டம்பர் 2021-ல் அண்டர்வேர்ல்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்தது.
இதன் மூலம் ஒருவரின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கீ லாக்கிங், குக்கீகளைத் திருடுதல் மற்றும் பல விஷயங்களை செய்ய முடியும். SOVA, முன்பு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் கவனம் செலுத்தியது. ஆனால் ஜூலை 2022-ல் இருந்து அந்த வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளை இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது.
மேலும் படிக்க | Flipkart Big Billion Days sale: Poco ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி
ட்ரோஜன் வைரஸ் எவ்வாறு தாக்குகிறது?
பயனர்களை ஏமாற்றுவதற்காக, Chrome, Amazon, NFT போன்ற சில பிரபலமான சட்டப்பூர்வமான பயன்பாடுகளின் லோகோவுடன் காண்பிக்கப்படும் போலி ஆண்ட்ராய்டு செயலிகளுக்குள் மறைந்திருக்கும். ஒருவேளை நீங்கள் அதனை நிறுவினால் யூசர்களின் நெட் பேங்கிங் ஆப்ஸில் உள்நுழைந்து வங்கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்களை சேகரித்துக் கொள்கிறது. SOVA-ன் புதிய பதிப்பு வங்கி செயலிகள் மற்றும் கிரிப்டோ பரிமாற்றங்கள்/வாலட்டுகள் உட்பட 200க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை இலக்காக கொண்டுள்ளது.
பெரும்பாலான ஆண்ட்ராய்டு பேங்கிங் ட்ரோஜான்களைப் போலவே, இந்த வைரஸூம் எஸ்எம்எஸ் வழியாக ஃபிஷிங் தாக்குதல்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஒருமுறை உங்கள் மொபைலுக்கு நுழைந்துவிட்டால், அதனால் திருடமுடியாத தகவல் என்று எதுவும் இருக்காது. வீடியோ, ஸ்கிரீன் ஷாட் என எதுவும் எடுக்க முடியும்.
மொபைலை பாதுகாப்பது எப்படி?
Play Store உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது அவற்றின் மத்திபுரைகள் உள்ளிட்டவைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். செயலி கேட்கும் அனைத்து அனுமதிகளையும் நீங்கள் வழங்கக்கூடாது. ஆண்டிராய்டு அப்டேட்டுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவும். நம்பகத்தன்மையற்ற செயலிகளின் அல்லது இணையப்பக்கங்களுக்கு செல்ல வேண்டாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ