Flipkart big billion days 2021-ல் அதிரடி தள்ளுபடியில் iPhone 12 வாங்க சூப்பர் வாய்ப்பு

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது Flipkart big billion days 2021 sale event-ல் Apple iPhone 12-க்கு பெரும் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2021, 06:37 PM IST
  • Flipkart big billion days 2021 sale event-ல் Apple iPhone 12-க்கு பெரும் தள்ளுபடி.
  • காலணிகள், புடவைகள், குர்தாக்கள், கைக்கடிகாரங்கள் போன்ற ஃபேஷன் பொருட்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி.
  • தளபாடங்கள் மற்றும் மெத்தைகளுக்கு 85 சதவிகிதம் தள்ளுபடி.
Flipkart big billion days 2021-ல் அதிரடி தள்ளுபடியில் iPhone 12 வாங்க சூப்பர் வாய்ப்பு title=

Flipkart big billion days 2021 sale event: இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது Flipkart big billion days 2021 sale event-ல் Apple iPhone 12-க்கு பெரும் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு அக்டோபர் 3, 2021, ஞாயிறு காலை 12 மணிக்கு துவங்கும்.

நிறுவனம் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ஃபிளிப்கார்ட் (Flipkart) ட்விட்டரில், “உங்களுக்கு பிடித்த iPhone 12-இன் விலையை யூகிக்கவும். குறிப்பு: இது ஐபோனில் இதுவரையிலான ஒரு மிக அற்புதமான டீலாக இருக்கும்! #ContestAlert #TheBigBillionDays #Flipkart *T&C apply, வரையறுக்கப்பட்ட கால சலுகை, விவரங்களுக்கு http://flipkart.com ஐப் பார்வையிடவும். " என எழுதியுள்ளது.

ஃபிளிப்கார்ட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து Big Billion Days Sale 2021 பற்றி ட்வீட் செய்துள்ளது. ட்வீட்டில், "இனி இந்தியா முழுவதும் பிளிப் செய்யும். அக்டோபர் 3 முதல் 10 வரை Flipkart Big Billion Days 2021-ல் பியூட்டி பிராண்டுகளில் எக்கச்சக்க சலுகைகள்” என எழுதியுள்ளது.

ALSO READ: Flipkart Big Billion Days Sale: நம்ப முடியாத சலுகை, அசத்தல் தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ் 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களை மேம்படுத்துவது குறித்து பிளிப்கார்ட் மற்றொரு கவர்ச்சியான ட்வீட்டை வெளியிட்டுள்ளது. ட்வீட்டில், "3 முதல் 10 அக்டோபரில் நடக்கவுள்ள ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேடுடன் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸை மேம்படுத்திக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

Flipkart.com இன் படி, பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடிகள் பல வகைகளில் கிடைக்கின்றன. ஆகையால் வாடிக்கையாளர்கள் அனைத்து பொருட்களையும் குறைவான விலையில் வாங்கி மகிழலாம். Flipkart.com-ன் படி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாகங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி (Festival Offers) இருக்கும். டிவி மற்றும் உபகரணங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கும்.

காலணிகள், புடவைகள், குர்தாக்கள், கைக்கடிகாரங்கள் போன்ற ஃபேஷன் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அழகு பொருட்கள், பொம்மைகள் மற்றும் உணவு வகைகள் 99 ரூபாயில் இருந்து கிடைக்கும். வீடு மற்றும் சமையலறை பொருட்கள் 99 ரூபாயில் தொடங்குகின்றன.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தளபாடங்கள் மற்றும் மெத்தைகளுக்கு 85 சதவிகிதம் தள்ளுபடியும், பிளிப்கார்ட் பிராண்டுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், வாலட் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் (Paytm) மூலம் உறுதியான கேஷ்பேக் கிடைக்கும்.

ALSO READ: Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News