WhatsApp Tips And Tricks: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, வாட்ஸ்அப்பின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, அலுவலகத்துடன் இணைக்க வாட்ஸ்அப் சிறந்த வழியாகும்.
முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, கவனத்தை சிதறடிக்கும் பல தேவையற்ற செய்திகள் வாட்ஸ்அப்பில் வரும். இந்த சிக்கலை நீங்களும் எதிர்கொண்டிருக்கலாம். அப்படி என்றால் உங்கள் வேலைகளை எளிதாக்கும் ஒரு சக்திவாய்ந்த வழியை தெரிந்துக் கொள்ளுங்கள்.
போனைப் பார்க்காமலேயே, யாருடைய வாட்ஸ்அப் கால் (Whatsapp calls), மெசேஜ் வந்திருக்கிறது என்று தெரிந்துக் கொண்டால் எப்படி இருக்கும்? இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்...
எந்தவொரு குறிப்பிட்ட தொடர்புக்கான அறிவிப்புகளையும் தனிப்பயனாக்கமாக மாற்றுவதற்கு WhatsApp அனுமதிக்கிறது. அதாவது, நீங்கள் வெவ்வேறு நபர்களுக்கு WhatsApp செய்திக்கான அறிவிப்பு தொனியை (customize notifications) அமைக்கலாம்.
ALSO READ | iPhone பயனர்களுக்கு அதிர்ச்சி: Whatsappல் பிரச்சனை
அதன் பிறகு, யார் மெசேஜ் செய்தாலும் அல்லது அழைத்தாலும், என்று மொபைலை பார்க்காமலேயே தெரிந்துக் கொள்ளலாம். தொனி, அதிர்வு, பாப்-அப் மற்றும் ஒளி போன்ற விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் அறிவிப்புகளைத் தனிப்பயனாக்க WhatsApp அனுமதிக்கிறது.
வாட்ஸ்அப் அறிவிப்பு ஒலியை எவ்வாறு தனிப்பயனாக்குவது:
1. முதலில், உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து சாட்பாக்ஸுக்குச் செல்லவும்.
2. மேல் பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, 'வியூ காண்டாக்ட்' ('View Contact') என்பதற்குச் செல்லவும்.
3. இங்கே நீங்கள் அந்தத் தொடர்புக்கான செய்தியையும் அழைப்பு அறிவிப்புகளையும் தனிப்பயனாக்கலாம்.
டோன்களின் பல தெரிவுகள் கிடைக்கும். பட்டியலில் இருந்து தேவையானதை தேர்ந்தெடுப்பதன் மூலம் எந்த தொனியையும் (notification tone) அமைக்கலாம். மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியுடனும் நீங்கள் அறிவிப்புகளை அமைக்கலாம். இது தவிர, வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, சியான், நீலம் மற்றும் ஊதா ஆகியவற்றிலிருந்து அறிவிப்பின் "ஒளி"யையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
Also Read | Time capsule: 130 ஆண்டுகள் பழமையான கால இயந்திரம் கண்டுபிடிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR