உங்கள் Netflix கணக்கில் இருந்து தேவையற்ற ஒரு கணினி (அ) மொபைல் கருவியை, அதாவது செயல் கருவியை நீக்குவது எவ்வாறு என்ற கேள்வி இந்த முழு அடைப்பு காலத்தில் உங்கள் மனதில் இருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் ஒரே Netflix கணக்கை பயன்படுத்தும் போது இவ்வாறான பிரச்சனைகள் எழலாம். எனவே இந்த பிரச்சனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பதை இந்த பதிவு நமக்கு கூறுகிறது. பொதுவாக உங்கள் Netflix கணக்கின் இயக்க அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் பட்டியலிலிருந்து, குறிப்பிட்ட ஒரு கருவியின் பெயரை நீக்குவது என்பது சுலபமான ஒரு காரியம் தான்.
Netflix நமக்களிக்கும் மிக புத்திசாலித்தனமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று என்னவென்றால், நாம் பதிவிடப்பட்ட கருவிகளின் பட்டியலை வைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம், நாம், நமது கணக்கை யார், எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதோடு, நமக்கு அறிமுகமில்லாத, விருப்பமற்ற கருவிகளையும் நீக்கலாம்.
உங்கள் Netflix-ல் இந்தப் பட்டியலைக் கண்டறிவதும், தேவையற்ற கருவிகளை நீக்கும் செயல்முறையும் மிகவும் எளிதாகும். இந்த மாற்றத்தை Netflix இணையபக்கம் மூலமாக மட்டுமே செய்ய முடியும். ஏனெனில், இந்தத் தேர்வு மொபைல் பயன்பாட்டில் இல்லை.
கணினி மூலம், Netflix-லிருந்து ஒரு கருவியை எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்...
- உங்கள் கணினியின் வெப் ப்ரௌசரில், Netflix இணையபக்கத்திற்கு சென்று, உங்கள் Username மற்றும் Password கொண்டு உங்கள் கணக்கில் உள் நுழையவும்.
- திரையின் மேல் பக்க வலது மூலையில், சிறிய ப்ரொஃபைல் ஐகனை க்ளிக் செய்யவும். பின்னர், ‘Account’-ல் கிளிக் செய்து Setting பக்கத்தில் நுழையவும்.
- ‘Settings’ பிரிவு வரும் வரை, கீழ் சென்று, ‘Manage Download Device’-ஐ கிளிக் செய்யவும்.
- பின்னர் நீங்கள் Netflix-லிருந்து நீக்க வேண்டிய கருவியை கண்டறிந்து ‘Remove Device’-ஐ கிளிக் செய்யவும்.
- நீங்கள் தேர்வு செய்த கருவியை Netflix-லிருந்து நீக்கப்பட்டு, உங்கள் திரையில் பச்சை வண்ணத்தில் ஒரு உறுதிப்படுத்தும் செய்தி வரும். இந்த செயல்முறை முடிவடைந்தது என்பதை இது உறுதி செய்யும். அந்த டிவைசில் உள்ள அனைத்து டௌன்லோட்களும் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்கக்ப்படும் வரை, அந்த கருவியில் பதிவிறக்கத்திற்கான அனுமதி இருக்காது.
Netflix-ன் நிலையான திட்டத்தின் அடிப்படையில்,, ஒரே நேரத்தில் ஒரே அகௌண்டிலிருந்து இரண்டு கருவிகள் மட்டுமே பதிவிறக்கம் செய்ய Netflix அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Netflix-லிருந்து சில கருவிகளை நாம் நீக்கியவுடன், உடனடியாக, புதிய கருவிகளில் பதிவிறக்கத்தைத் துவக்க முடியும்.
மொழியாக்கம்: ஸ்ரீபிரியா சம்பத்குமார்