Jio Vs Airtel Vs Vodafone... தினம் 2GB டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது...

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2024, 04:10 PM IST
  • டிஜிட்டல் யுகத்தில் டேட்டா அதிகம் கொடுக்கும் திட்டங்களுக்கு தான் நல்ல டிமாண்ட் உள்ளது.
  • 2ஜிபி தினசரி டேட்டாவுடன் கூடிய சில ப்ரீபெய்ட் திட்டங்கள்.
  • மலிவான கட்டணத்தில் ப்ரீபெய்ட் பிளான்கள் வழங்கும் நிறுவனம் எது.
Jio Vs Airtel Vs Vodafone... தினம் 2GB டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது... title=

Airtel Vs Jio Vs Vi: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் கட்டண அதிகரித்த, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதால், நிறுவனங்கள், பல சலுகைகளுடன், அதிக நன்மைகளுடன் மலிவான திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டேட்டா அதிகம் கொடுக்கும் திட்டங்களுக்கு தான் நல்ல டிமாண்ட் உள்ளது. ஏனெனில், பள்ளி மாணவர்கள் முதல் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளைச் செய்பவர்ககள், என பல தரப்பு மக்களுக்கும் அதிக வேக மொபைல் டேட்டா அதிகம் தேவைப்படுகிறது. இந்நிலையில் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களில் மலிவான கட்டணத்தில் பிளான்கள் வழங்கும் நிறுவனம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ (Jio) வழங்கும் தினம் 2GB டேட்டா பிளான்

ஜியோவின் வழங்கும் மலிவான திட்டமான ரூ.198 மதிப்பிலான பிளானில் தினமும் 2ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும். இதன் வேலிடிட்டி 14 நாட்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைகிறது. இருப்பினும், இதன் வேலிடிட்டி வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் வேலிடிட்டியை விட 15 நாட்கள் குறைவு.

மேலும் படிக்க | உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள்

ஏர்டெல் (Airtel) வழங்கும் தினம் 2GB டேட்டா பிளான்

ஏர்டெல் (Airtel)அதன் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா திட்டத்தின் மதிப்பு ரூ.379. இதன் வேலிடிட்டி ஒரு மாதம் அதாவது 30 நாட்கள். 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் திட்டங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான திட்டம் இது . இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினம் 100 இலவச எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளேயின் சந்தாவும் திட்டத்தில் கிடைக்கிறது. 

வோடபோன் ஐடியா ( Vi) வழங்கும் தினம் 2GB டேட்டா பிளான்

2ஜிபி தினசரி டேட்டாவுடன் வோடபோன் ஐடியாவின் மலிவான திட்டத்தின் மதிப்பு ரூ.379. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி 1 மாதம். இந்த திட்டத்தில், வரம்பற்ற அழைப்புடன், தினம் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில், நிறுவனம் வீகெண்ட் டேட்டா ரோல்ஓவர், Binge All Night டேட்டா வசதியையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | OTT பலன்களுடன் தினம் 2GB டேட்டா... ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தலான ரீசார்ஜ் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News