JIO vs AIRTEL vs VI: ரூ.300 கீழ் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோனில் 300 ரூபாய்க்கும் கீழ் இருக்கும் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான்களை தெரிந்து கொள்வோம்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2023, 02:50 PM IST
JIO vs AIRTEL vs VI: ரூ.300 கீழ் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான் title=

நாட்டின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகியவை மற்ற நிறுவனங்களை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடிக்க கவர்ச்சியான ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன. அந்தவகையில், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் சிறந்த அம்சங்களுடன், ப்ரீப்பெய்ட் திட்டங்களை எந்த நிறுவனம் கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.    

ஜியோவின் ரூ.149 திட்டம்: 

இந்த திட்டத்தில் ஜியோ ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் அதன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள். மேலும் வாடிக்கையாளர்கள் அனைத்து ஜியோ பயன்பாடுகளின் சந்தாவையும் பெறலாம். 

ஜியோவின் ரூ 179 திட்டம்:

ஜியோவின் இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இந்த திட்டம் பயனர்களுக்கு ஜியோ பயன்பாடுகளின் சந்தாவையும் கொடுக்கிறது. 

மேலும் படிக்க | iPhone 12 இல் ஜாக்பாட் தள்ளுபடி! அலைமோதும் வாடிக்கையாளர்கள் கூட்டம்

ஜியோவின் ரூ.209 திட்டம்: 

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம், தினமும் 1 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல்லின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்: 

209 ரூபாய் விலையில் வழங்கப்படும் இந்த திட்டம் 21 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது.  அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பும், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி தினசரி டேட்டாவும் வழங்கப்படும். OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் நீங்கள் Amazon Prime வீடியோவின் மொபைல் பதிப்பின் இலவச சோதனையையும் பெறுகிறீர்கள்.

ஏர்டெல்லின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.239க்கு ஈடாக, ஏர்டெல் அதன் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி இணையம், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிட்டெட் அழைப்பு போன்ற பலன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், Amazon Prime வீடியோவின் மொபைல் பதிப்பின் இலவச டிரையல் கொடுக்கப்படுகிறது. வேலிடிட்டி 24 நாட்கள்.

ஏர்டெல்லின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்: 

ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் விலை ரூ.265 ஆகும். இதில் 28 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பும், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டாவும் பெறுவீர்கள். OTT நன்மைகளைப் பொறுத்தவரை இந்த திட்டத்தில் நீங்கள் Amazon Prime வீடியோவின் மொபைல் பதிப்பின் இலவச டிரையலை பெறுவீர்கள். 

Vi இன் ரூ.199 திட்டம்: 

வோடாஃபோன் ஐடியா ஒரு நாளைக்கு 1GB டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை இந்த திட்டத்தில் வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 18 நாட்கள். இந்த திட்டத்தில் வாடிகைகயாளர்கள் Vi Movies & TV ஆப்ஸின் மெம்பர்ஷிப்பையும் பெறுவார்கள்.

Vi இன் ரூ 239 திட்டம்:

வோடாஃபோன் - ஐடியாவின் இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 24 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை 239 ரூபாய். இந்த திட்டம் பயனர்களுக்கு Vi Movies & TV ஆப்ஸின் மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.269 திட்டம்: 

28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 269 ரூபாய்க்கு பெறுவீர்கள். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு Vi Movies & TV பயன்பாட்டிற்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க |JIO vs AIRTEL vs VI: ரூ.300 கீழ் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News