ரூ 895 ரீசார்ஜ்..1 வருட வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் ஜியோ

ஒரு சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குகிறது, இது பயன்பாட்டின் பிரத்யேக ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில் 1 வருட வேலிடிட்டி ரூ.895க்கு வழங்கப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 3, 2023, 01:41 PM IST
  • சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த திட்டத்தில் 1 வருட வேலிடிட்டி வழங்குகிறது.
  • ஜியோ 895 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு.
ரூ 895 ரீசார்ஜ்..1 வருட வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் ஜியோ title=

ஜியோ ரீசார்ஜ் திட்டம்: நீங்கள் ஜியோ பயனராக இருந்து, சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை பெற விரும்பினால், புதிய திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். அது வேறு எதுவும் இல்லை ஜியோவின் ரூபாய் 895 ரீசார்ஜ் திட்டமாகும். மேலும் இதில் இருக்கும் வசதிகள் கட்டாயம் உங்களை ஈர்க்கும். எனவே நீங்களும் இந்த ரேசார்க் திட்டத்தை பெற விரும்பினால், முதலில் அதன் வசதிகளைப் பற்றிய முழு விவரத்தை இங்கே விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ 895 ரீசார்ஜ் திட்டம்
இப்போது நாம் ஜியோ 895 ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசுகையில், இதில் நீங்கள் அன்லிமிடெட் காலிங் வசதி பெறுவீர்கள். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 12 திட்டங்களை வழங்குகிறது. அதாவது, இதன்படி, திட்டத்தில் மொத்த வேலிடிட்டி 336 நாட்கள் கிடைக்கும். இதன் போது, ​​உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. இதனுடன் 2ஜிபி டேட்டாவை நீங்கள் 28 நாட்களுக்கு பெறுவீர்கள்.

மேலும் படிக்க | அரசு வழங்கிய குட் நியூஸ்: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விலை குறையும், அள்ளிட்டு போகலாம்!!

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டத்தில், 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன, எனவே இது பயனர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான திட்டமாக இருக்கும். அதேபோல் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி நீங்களும் யோசித்துக்கொண்டிருந்தால், ஜியோ ஃபோன் பயனர் மட்டுமே பெற முடியும். மற்ற ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது. மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு ஜியோ டிவி, ஜியோ சினிமாவின் சந்தாவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி ரீசார்ஜ் செய்வது
ஜியோவின் இந்த ரூ 895 திட்டத்தை நீங்கள் https://www.jio.com/selfcare/plans/mobility/jiophone-plans/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News