Jio Prepaid Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது. பல புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் பல ஆபர்களை கொடுக்கிறது. இதன் மூலம் குறைந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல நன்மைகளை பெற முடியும். ஜியோவின் ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ நிறுவனம் பல நன்மைகளை வழங்குகிறது, இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல ஆபர்கள் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398 ரீசார்ஜ் திட்டம் பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தெரிந்து படியுங்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தைப் போலவே, கூடுதல் டேட்டா மற்றும் இலவச ஓடிடி நன்மையையும் ஜியோ வழங்குகிறது. இதில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில் கூடுதல் 4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ. 398 ஆகும். இதன் செல்லுபடியாகும் காலம் சற்று குறைவு என்றாலும், பல நன்மைகளை வழங்குகிறது, இதன் காரணமாக ஜிவ் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 6 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. ஜியோவின் டேட்டா வவுச்சரில் 6ஜிபி டேட்டா விலை ரூ. 61 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டா வவுச்சர் இலவசமாகக் கிடைக்கும். மேலும் டேட்டா முடிந்த பிறகும் 64 Kbps வேகத்தில் உங்களால் இணையத்தை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் பல ஓடிடி நன்மைகளும் கிடைக்கின்றன. ஜியோ டிவி பிரீமியம் மூலம், பல OTT இயங்குதளங்களுக்கு இலவச சந்தாவைப் பெறுவீர்கள். இதில் JioCloud, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, DocuBay, EPIC ON, Hoichoi, JioTV மற்றும் JioCinema Premium, ஆகியவை அடங்கும்.
ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ பயனர்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும் ரூ. 749 ப்ரீபெய்ட் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டாவுடன் மொத்தம் 180ஜிபி பெற முடியும். பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ள முடியும். மேலும் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற பல்வேறு நன்மைகளை பெறுகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் 5G ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் பயனர்கள் வரம்பற்ற இலவச 5G டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ