Jio Plus Postpaid: இந்தியாவில் போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம், 4 பேர் கொண்ட குடும்பம் ஜியோ பிளஸ் சேவையின்கீழ் ஒரு மாதத்திற்கு அதன் சேவைகளை இலவசமாக பெற முடியும்.
சேவை திட்டங்கள் மாதத்திற்கு 399 ரூபாயில் தொடங்குகின்றன. ஒரு சிம்மிற்கு 99 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். அத்துடன் 3 கூடுதல் இணைப்புகள் வரை அனுமதிக்கப்படுகிறது. அதாவது 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மொத்த மாதாந்திர கட்டணம் ரூ. 696 (அடிப்படைத் தொகை ரூ. 399 + ரூ. 99 x 3).
புதிய திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
- ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் குடும்பத் திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவிற்கு ரூ.399 இல் தொடங்குகிறது.
- இதில், அதிக கட்டணம் கொண்ட திட்டம் ரூ.799 இல் தொடங்குகிறது. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் 100ஜிபி டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது.
- இரண்டு திட்டங்களும் நீங்கள் 3 குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம்.
மேலும் படிக்க | ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!
- உங்கள் எண் ஜியோ True 5G Welcome ஆஃபருக்குத் தகுதி பெற்றிருந்தால், நீங்கள் வரம்பற்ற இலவச 5ஜி டேட்டாவைப் பெறலாம்.
- உங்களுக்கு விருப்பமான மொபைல் எண், Netflix, Amazon, JioTV மற்றும் JioCinema போன்ற சேவைகளுக்கான சந்தாக்கள் மற்றும் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணத்தில் இந்தியா அழைப்பு
சர்வதேச ரோமிங்கில் வைஃபை அழைப்பும் இதில் அடங்கும்.
- இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கான சந்தாதாரர்கள் ஜியோ ஃபைபருக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையையும் (Safety Deposit) செலுத்த வேண்டியதில்லை.
- போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பெற்ற பிறகு போஸ்ட்பெய்டு பயனர் மனம் மாறினால், எந்த கேள்விகளையும் எதிர்கொள்ளாமல் உடனடியாக திட்டத்தை ரத்து செய்யலாம்.
ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்களை எவ்வாறு பெறுவது:
- 70000 70000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
- பாதுகாப்பு வைப்புத் தள்ளுபடியைப் பெற தொடர்புடைய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் போஸ்ட்பெய்டு சிம்மை இலவசமாக ஹோம் டெலிவரி செய்ய முன்பதிவு செய்யுங்கள்.
தேவைப்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு மேலும் 3 சிம் கார்டுகளைக் கோரவும்.
- பொருந்தக்கூடிய செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தவும் (செயல்படுத்தும் போது ரூ.99/சிம்)
பலன்களைப் பகிர MyJio செயலியை பயன்படுத்தி 3 குடும்ப உறுப்பினர்களை உங்கள் கணக்கில் இணைக்கவும்.
மேலும் படிக்க | அதிரடியாக 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய வோடபோன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ