ஜியோ 5ஜி ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?... அசத்தும் அப்டேட்

ஜியோ நெட்வொர்க்கின் 5G ஸ்பீட் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் நெட்வொர்க் வேகம் ஒரு நொடிக்கு ஒரு ஜிபியாக இருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 7, 2022, 08:13 PM IST
  • ஜியோ நெட்வொர்க்கின் 5ஜி வேகத்துக்கு சோதனை நடந்தது
  • ஒரு நொடிக்கு ஒரு ஜிபி வேகம் இருக்கிறது
  • இதனால் பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சி
 ஜியோ 5ஜி ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?... அசத்தும் அப்டேட் title=

பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில் 5ஜி நெவொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இதனையடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில்  சோதனை அடிப்படையிலான 5ஜி சேவை தொடங்கவுள்ளதாவும், மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், 5ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ வியாழன் அன்று மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று நகரங்களில் 5G சேவைகளின் பீட்டா சோதனைகளைத் தொடங்கியது. அப்போது  பயனர்கள் 1Gbpsக்கும் (ஒரு நொடிக்கு ஒரு ஜிபி வேகம்) அதிகமான பதிவிறக்க வேகத்தைப் பெறுவதாகவும், டெல்லியின் லுடியன்ஸ் மண்டலத்தில் உள்ள சாணக்யபுரியில், பயனர்கள் 1Gbps-க்கும் அதிகமான இணைய வேகத்தைப் பெற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jio (@reliancejio)

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் கூறியதாவது, “படிப்படியாக மக்கள் முழு நகரத்திலும் 5G சிக்னல்களைப் பெறத் தொடங்குவார்கள். ஜியோ தனித்த 5G தொழில்நுட்பம் 'True 5G' என முத்திரை குத்தப்பட்டுள்ளது. 'ஜியோ வெல்கம் ஆஃபர்' பயனர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது 5ஜி கைப்பேசியை மாற்றத் தேவையில்லை. தானாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவைக்கு அவர்கள் அப்டேட் செய்யப்படுவார்கள்.

 

Jio ட்ரூ 5G சேவைகளுடன் தங்களுடைய 5G கைபேசிகள் தடையின்றி வேலை செய்ய அனைத்து கைபேசி பிராண்டுகளுடனும் Jio இணைந்து செயல்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக்கூடிய 5G சாதனங்களின் விரிவான வரம்பைப் பெறலாம்” என தெரிவித்தது.

மேலும் படிக்க | Jio Laptop: 'எங்கும் ஜியோ எதிலும் ஜியோ' அடுத்து களமிறங்கும் ஜியோ லேப்டாப்; விலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News