Jio அளித்த அதிர்ச்சி: அடுத்தடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களில் அதிகரிப்பு

அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குப் பிறகு, இப்போது ஜியோ ஃபோன் திட்டங்களின் விலையையும் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 12:11 PM IST
  • ஜியோ ஃபோன் திட்டங்களின் விலையை நிறுவனம் உயர்த்தியுள்ளது.

    ஜியோ போனின் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.186 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரூ.186-க்கு விற்கப்பட்ட ஜியோ போனின் ரீசார்ஜ் திட்டம் தற்போது ரூ.222 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Jio அளித்த அதிர்ச்சி: அடுத்தடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களில் அதிகரிப்பு title=

Reliance Jio: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையையும் சில நாட்களுக்கு முன்பு உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜியோ மேலும் ஒரு அதிர்ச்சியான முடிவை எடுத்துள்ளது. அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குப் பிறகு, இப்போது ஜியோ ஃபோன் திட்டங்களின் விலையையும் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜியோ போன் பிளான்களின் விலை உயர்ந்தது

ஜியோ (Jio) தனது இணையதளத்தில் ஜியோ ஃபோன் திட்டங்களின் விலையை புதுப்பித்துள்ளது. ஜியோ மூன்று திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அதனுடன் புதிய திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இவை ஜியோ போனின் ரீசார்ஜ் திட்டங்களாகும். நிறுவனம் புதிய விலைகளையும் அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது

ஜியோ போனின் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.186 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பயனருக்கு ஒவ்வொரு நாளும் 1 ஜிபி இணைய வசதி, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் வருகிறது.

ALSO READ: தனிவழியில் Jio, வியப்பில் Airtel மற்றும் Vodafone Idea 

இதுவரை ரூ.186-க்கு விற்கப்பட்ட ஜியோ போனின் ரீசார்ஜ் திட்டம் தற்போது ரூ.222 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 222 ஆல் இன் ஒன் திட்டம் 20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

முன்னர் ரூ. 749-க்கு கிடைத்த ஜியோ ஃபோனின் ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan) தற்போது ரூ. 888 ஆக மாறியுள்ளது. இந்த திட்டத்தில் உங்களுக்கு 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தில் 24ஜிபி டேட்டா கிடைக்கும். இதில், வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அனைத்து ஜியோ செயலிகளின் சந்தாவையும் வாடிக்கையாளர்கள் இதி பெறலாம். இந்த திட்டம் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஜியோ போனுக்கு புதிய திட்டம்

நிறுவனம் ஜியோ போன் (Jio Phone) பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் ரூ. 152-க்கு ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா போன்ற அனைத்து ஜியோ செயலிகளுக்கான அணுகலையும் பெறுவார்கள். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

நீங்கள் ஜியோ ஃபோன் பயனராக இருந்து, இந்த ரீசார்ஜ் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற விரும்பினால், ஜியோவின் இணையதளம் அல்லது செயலியிலிருந்து பெறலாம். அல்லது,  உங்கள் அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்கு சென்றும் இந்த சேவையைப் பெற முடியும்.

ALSO READ:ஏர்டெல், வோடாஃபோனை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஜியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News