ஐபிஎல்-காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ!

ஐபிஎல் 2022 சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில் ஜியோ அதன் பயனர்களுக்கு ஸ்ட்ரீமிங் செய்வதற்கான சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 26, 2022, 02:15 PM IST
  • ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது.
  • ஜியோ ஐபிஎல்-காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
ஐபிஎல்-காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ! title=

ஐபிஎல் 2022 (இந்தியன் பிரீமியர் லீக்) சீசன் இன்று தொடங்குகிறது, இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் பிரியர்களுக்காக அவர்களது ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற சாதனங்களில் இருந்து கிரிக்கெட்டை ஸ்ட்ரீமிங் செய்ய புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.  மேலும் ஜியோ ஏற்கனவே டி20 bonanza-கான சில ரிவார்டுகளை அறிவித்துள்ளது.  ஜியோ பயன்படுத்துபவர்களாக இருந்தால் 2022 ஐபிஎல்-க்கான இந்த சலுகையை பெறலாம்.  

மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: பெஸ்ட் டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ரீப்பெய்ட் பிளான்கள்

ஜியோ பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா பெறக்கூடிய நான்கு திட்டங்களைப் பெறுகிறார்கள்.  இந்த திட்டங்கள் முறையே 28 நாட்களுக்கு ரூ.499, 56 நாட்களுக்கு ரூ.799, 84 நாட்களுக்கு ரூ.1066 மற்றும் 365 நாட்களுக்கு ரூ.3119 ஆகும்.  மேலும் ஜியோ வருடம் முழுவதும் தினசரி 2.5 ஜிபி டேட்டா பயன்படுத்தி கொள்ளும் சலுகையையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, இந்த வருடாந்திர திட்டமானது ரூ.2,999க்கு கிடைக்கிறது.  ஜியோவின் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி திட்டமானது தற்போது ரூ.601க்கு  கிடைக்கிறது.  

மேலும் 55 நாட்களுக்கு, 55 ஜிபி டேட்டா மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா திட்டங்கள் முறையே ரூ.555 மற்றும் ரூ.659 என்கிற விலையில் ஜியோ பயனாளர்களுக்கு கிடைக்கிறது.  அதுமட்டுமல்லாது ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் ஸ்ட்ரீம் செய்வதற்கான சலுகையையும் வழங்குகிறது,  ரூ.1,499க்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி  2 ஜிபி டேட்டாவும் அதனை தொடர்ந்து ரூ.4,199க்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

ஜியோஃபைபர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.999 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டத்தில் அவர்களின் டிவிகளில் அனைத்து போட்டிகளையும் ஜியோஎஸ்டிபி-ல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி மூலம் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் பார்த்து மகிழலாம்.  ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங் (ஜெசிபிஎ) அதிக ரிவார்டுகளை வழங்குகிறது.  மேலும் இது இலவச கேம் மற்றும் கேம் சாட்களில் எமோஜி ஸ்டிக்கர் பகிர்வதை ஆதரிக்கிறது.

மேலும் படிக்க | ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News