14 ஓடிடிகள் இலவசம்... ஹாட்ஸ்டார், பிரைம், SunNXT எல்லாம் இருக்கு - ஜியோவின் ஜாக்பாட் பிளான்

JioTV Premium Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோ டிவி பிரீமியத்தில் மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி சுமார் 14 ஓடிடி செயலிகளை இலவசமாக வழங்குகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 15, 2023, 12:29 PM IST
  • ஜியோ டிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.
  • இதில் Add-On திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த திட்டங்களில் தினசரி 2 ஜிபி இலவச டேட்டா கிடைக்கிறது.
14 ஓடிடிகள் இலவசம்... ஹாட்ஸ்டார், பிரைம், SunNXT எல்லாம் இருக்கு - ஜியோவின் ஜாக்பாட் பிளான் title=

JioTV Premium Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ டிவி (JioTV) பிரீமியம் சந்தாவுடன் மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ டிவி பிரீமியம் மூலம், அந்நிறுவனம் ஜியோ சினிமா (JioCinema) பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ZEE5, SunNXT, சோனிலிவ், பிரைம் வீடியோ (மொபைல்), டிஸ்கவரி+ உள்ளிட்ட 14 ஓடிடி செயலிகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. 

குறிப்பாக, Lionsgate Play, Docubay, Hoichoi, Planet Marathi, Chaupal, EpicON போன்ற செயலிகளும் அதில் கிடைக்கின்றன. ஜியோ டிவி பிரீமியம் திட்டத்தை பெறுவதுடன், ஒரே நேரத்தில் பல ஓடிடிகளின் சந்தாவைப் பெறுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜியோ டிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை. 

முன்னதாக, ஜியோ டிவியின் இலவச பதிப்பு மட்டுமே கிடைத்தது. அந்த வகையில், ஜியோ டிவி பிரீமியத்தின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை இதில் காணலாம். ஜியோ நிறுவனம் மூன்று ஜியோ டிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரூ.398, ரூ.1198 மற்றும் ரூ.4498 திட்டங்களும் அடங்கும். 

ரூ.398 திட்டம்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். இதில், பயனர்கள் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். இதுமட்டுமின்றி 100 இலவச எஸ்எம்எஸ்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் 12 ஓடிடி தளங்களின் சந்தாவைப் பெறுகின்றனர்.

மேலும் படிக்க | ஜியோவின் டாப் டக்கர் பிளான்: மாதம் 249 செலவழித்தால் 388 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2.5 ஜிபி டேட்டா

ரூ.1198 திட்டம்

இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில், 14 ஓடிடி தளங்களின் இலவச சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். 

ரூ. 4498 திட்டம்

இந்த திட்டத்தில் நிறுவனம் 2ஜிபி டேட்டாவை தினமும் பெறுகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் 14 ஓடிடிகளின் இலவச சந்தாவைப் பெறலாம். இந்த திட்டத்திலும், வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது ஒரு வருடமாகும்.

Add-On திட்டம்

இதனுடன், ஜியோ நிறுவனம் Add-on திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 148 ரூபாய் ஆகும். இதில், பயனர்கள் 12 ஓடிடிகளின் சந்தாவைப் பெறுகின்றனர். இதில் வரம்பற்ற அழைப்பு மற்றும் ரூ.100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

மேலும் படிக்க | ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம்: 2 ஓடிடி தளங்கள், அதிக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News