கூகுள் கொடுக்கும் ரெட் வார்னிங் - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

யூசர்களின் பாதுகாப்புக்காக கூகுள் நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2022, 04:44 PM IST
  • கூகுள் சாட் பாக்ஸில் புதிய அம்சம்
  • ஹேக்கிங்கை தடுக்க கூகுள் புதிய முயற்சி
  • யூசர் பாதுகாப்புக்காக கூகுள் நிறுவனம் அதிரடி
கூகுள் கொடுக்கும் ரெட் வார்னிங் - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! title=

டெக்னாலஜியின் வளர்ச்சியால் நாளுக்கு நாள் ஆபத்துகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. இதனால் டிவிட்டர், கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் யூசர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. சமூகவிரோதிகளும், ஹேக்கர்களும் உலாவும் இணையத்தில் அவர்களிடம் இருந்து யூசர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்லாயிரம் கோடிகளை டெக் நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. 

மேலும் படிக்க | வீட்டை கண்காணிக்கும் ’மூன்றாவது கண்’ - ரூ.3 ஆயிரத்தில் சிசிடிவி

இருப்பினும் ஹேக்கர்கள் இணையத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அல்லது யூசர்களை மயக்கி தங்களுக்கு வேண்டிய தகவல்களையும், செய்திகளையும் பெற்றுக் கொண்டு மோசடிகளை அரங்கேற்றுகின்றன. இது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் டெக் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் அதே  சமயத்தில் தங்களால் இயன்றளவுக்கு புதிய புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கூகுள் இந்த விஷயத்தில் பெரும் அக்கறை கொண்டுள்ளது. நாள்தோறும் புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அண்மையில் ஜிமெயில் மற்றும் கூகுள் சாட் பாக்ஸூகளில் அந்த மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்க முடியும். தற்போது மேலும் ஒரு புதிய அம்சம் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் சாட் பாக்ஸில் தோன்றும் அல்லது ஊடுருவும் தவறான தகவல்களைக் கொண்ட லிங்குகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் ரெட் வார்னிங் நோடிபிகேஷன் அலார்ட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை எச்சரிக்கை மெசேஜ் இருக்கும்போது உங்களுக்கு ஆப்சனும் இருக்கும். நீங்கள் அந்த லிங்குகள் தவறானவை அல்ல என உணர்ந்தால் Allow அம்சத்தையும், இல்லையென்றால் தடுக்கிற ஆப்சனையும் யூசர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்களில் இருந்து யூசர்களை பாதுகாக்கும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கூகுள் சாட் யூசர்கள் இதன் மூலம் ஹேக்கிங் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | திருடப்பட்ட கார்களை ஜிபிஎஸ் இல்லாமல் கண்டுபிடிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News