புதுடில்லி: சமூக ஊடகங்களில், இதுபோன்ற பல்வேறு செய்திகள் வைரலாகி வருகின்றன, அவற்றில் சில மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தாலும், பல தவறான வழி காட்டுவதாக இருக்கிறது. செய்தியின் உண்மைத்தன்மையை தெரிந்துக் கொள்ளாமல், அதை அப்படியே பிறருக்கு forward செய்கின்றனர். இப்படி பலருக்கு துரிதமாக பரவும் செய்திகளின் உண்மைத் தன்மை ஒரு கட்டத்தில் அம்பலமாகிவிடும் என்றாலும், பலர் தவறான புரிதல்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை பரிசோதிக்கும் சோதனை (Fact Check) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சமீபத்தில் திருமணம் தொடர்பாக வெளியாகும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் பெயரில் மத்திய அரசு 'கன்யா விவாஹ் யோஜனா' (Kanya Vivah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்த செய்தி கூறுகிறது. 40 ஆயிரம் ரூபாய் ரொக்க உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நீங்கள் வாங்கி விட்டீர்களா?
இது PIB இன் உண்மை சோதனை
இந்த செய்தி உண்மையில்லை, போலியானது என்பது உண்மை கண்டறியும் சோதனையில் தெரியவந்துள்ளது. 'கன்யா விவாஹ் யோஜனா' (Kanya Vivah Yojana) திருமண உதவித் திட்டம் என்ற பெயரில், பணம் யாருடைய கணக்கிற்கும் மாற்றப்படுவதில்லை என்று PIB Fact Check ஒரு ட்வீட்ர் செய்தி வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளது.
'பிரதான் மந்திரி கன்யா திருமணத் திட்டத்தின் கீழ்' பெண்களின் திருமணத்திற்காக மத்திய அரசு, 40,000 ரூபாய் வரையிலான பணத்தை வழங்குவதாக யூடியூப்பில் வெளியான ஒரு வீடியோவில் கூறப்படுகிறது.
#PIBFactCheck: இந்த கூற்று போலியானது. இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு நடத்துவதில்லை.
நீங்கள் எந்தவொரு செய்தியின் உண்மைத்தன்மையையும் சரிபார்க்கலாம். உங்களுக்கு இந்த செய்தி வந்தால், https://factcheck.pib.gov.in/ அல்லது வாட்ஸ்அப் எண் +918799711259 என்ற முகவரியில் பிஐபிக்கு அனுப்பலாம் அல்லது pibfactcheck@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, உண்மை சோதனையை செய்யலாம். இந்த செய்தியை நீங்கள் PIBயின் வலைத்தளம் https://pib.gov.in இலும் பார்க்கலாம்.
Read Also | AirPods Proவில் ஒலி சிக்கல்களுக்கு தீர்வு காணுமா Apple?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR