ஆப்பிள் களமிறக்கும் அடுத்த ஐபோன்! விலைய கேட்டா வாங்காம விடமாட்டீங்க

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14க்குப் பிறகு குறைவான விலையில் அடுத்த ஐபோன் ஒன்றை விரைவில் களமிறக்க இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 5, 2022, 09:18 AM IST
  • ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்
  • விலை மற்றும் வடிவமைப்பு விவரம்
  • இந்தியாவில் அறிமுகமாகும் தேதி இதோ
ஆப்பிள் களமிறக்கும் அடுத்த ஐபோன்! விலைய கேட்டா வாங்காம விடமாட்டீங்க title=

iPhone SE 4 Price Leaked: ஆப்பிள் புதிய iPhone 14 சீரிஸை ஒரு மாதத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த போன் மார்க்கெட்டில் அமோக விற்பனையில் இருக்கும் நிலையில், அடுத்து அந்த நிறுவனம் களமிறக்கும் ஐபோன் குறித்தும், அதன் விலை குறித்த தகவலும் லீக்காகியுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் 4th-gen iPhone SE- ஐ உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஐபோன் SE மாடல்களின்  iPhone SE, iPhone SE 2 மற்றும் iPhone SE 3 மூன்று சீரீஸ்களை வெளியிட்டுள்ளது.

இந்த வரிசையில் இப்போது iPhone SE 4 விரைவில் வெளியாக இருக்கிறது. லேட்டஸ்டாக லீக்காகியிருக்கும் தகவலின்படி, பல்வேறு மாற்றங்களுடன் iPhone SE 4 மொபைல் வெளியாகும் என்றாலும், ஏமாற்றமளிக்கும் ஒரு விஷயமும் இருக்கிறது. அதுஎன்னவென்றால், இதற்கு முன்பு இதே சீரிஸில் வெளியான ஐபோன்களைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்குமாம்.    

வடிவமைப்பை லீக் செய்த உளவாளி

இந்த ஆண்டு ஐபோன் மினி மாடலை ஆப்பிள் நிறுத்தும். அதன்பிறகு அடுத்த தலைமுறை iPhone SE அல்லது iPhone SE 4 இந்த இடத்துக்கு பூர்த்தி செய்யும் வகையில் வெளியிடப்படும். இது ஒரு சிறிய தொலைபேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வடிவமைப்பு பொறுத்த வரையில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும். ஐபோன் எஸ்இ 4, ஐபோன் எக்ஸ்ஆரின் வடிவமைப்பில் வெளியாக வாய்ப்புகள் அதிகம். 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஹோம் பட்டன் இல்லாமல் இருக்கும் என்றும் பிரபல யூடியூபர் ஜான் பிரோஸ்ஸர் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | 20,000 ரூபாயில் 5ஜி ஃபோன் வேண்டுமா?... இதை படியுங்கள்

நாட்ச் போன்ற வடிவமைப்பு 

புதிய ஐபோன் ஒரு நாட்ச் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் சில காரணங்களால் அதில் ஃபேஸ் ஐடி இருக்காது. ஆப்பிளின் பாதுகாப்பான 3டி ஃபேஸ் அன்லாக் அம்சத்திற்குப் பதிலாக, ஐபோன் எஸ்இ 4, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இடம்பெறும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார். 

இந்தியாவில் iPhone SE 4 விலை

iPhone SE 4, அதன் முந்தைய iPhone SE 3 உடன் ஒப்பிடுகையில் விலை உயர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. சீனாவில் இதன் விலை CNY 4,000 (சுமார் ரூ. 45 ஆயிரம்) மற்றும் CNY 5,000 (ரூ. 57,032) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. iPhone SE 2022 CNY 3,499 (ரூ 39,922) விலையில் விற்பனையாகிறது. ஐபோன் எஸ்இ 2022, இந்தியாவில் சுமார் 45 ஆயிரத்துக்கு விற்கப்படும் நிலையில், புதிய ஐபோன் இந்தியாவில் விலை இதை விட சற்று அதிகமாக இருக்கலாம். எப்போது அறிமுகம் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | Google Translate இனி வேலை செய்யாது! சேவையை நிறுத்திய கூகுள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News