iPhone 5G: ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

iPhone 5G: ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2022, 09:19 AM IST
  • இந்தியாவில் வேகமெடுக்கும் 5ஜி நெட்வொர்க்
  • ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும்போட்டி
  • 5ஜி நெட்வொர்க்கை பெற ஐபோன் போட்டுள்ள திட்டம்
iPhone 5G: ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி title=

இந்தியாவில் ஐபோன் 5ஜி சேவை எப்போது வரும் என காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட மாடல்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏர்டெல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்குள் ஐபோன்களுக்கான 5ஜி சேவை வந்துவிடும் என டெலிகாம் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் அதன் சீக்ரெட் நடவடிக்கை வெளியே கசிந்துவிட்டது.  

தி இடி டெலிகான் அறிக்கையின்படி, ஐபோன் 5 ஜி நெட்வொர்க் ஆதரவை இயக்க மென்பொருள் புதுப்பிப்பை பெறும் என கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஆப்பிள் நிறுவனம், ஏர்டெல்லின் ஒத்துழைப்புடன் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் 5ஜி நெட்வொர்க் சேவை சோதனையை தொடங்கியுள்ளது. இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் ஐபோன் மாடல்கள் 5ஜி நெட்வொர்க்கை பெறும் வகையில் அப்டேட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவும் முடிவு செய்திருகிறது. 

மேலும் படிக்க | வாட்ஸ்அப் மட்டுமல்ல இனி ட்விட்டரிலும் ஸ்கிரீன்ஷாட் கூடாது - ஏன் தெரியுமா?

iPhone 5G புதுப்பிப்பு விரைவில்

ஏர்டெல் நிறுவனம் 5ஜி நெட்வொர்க்கை தனித்தன்மையற்ற பதிப்பை பயன்படுத்தி வருகிறது. அதாவது 5ஜி டவர் அப்டேட் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தாலும், அந்த டவர் கிடைக்காத இடத்தில் 4ஜி இணையசேவைக்கு தானாக மாறிக்கொள்ளும். அதேநேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனித்தன்மையுடன் 5ஜி சேவையை கொடுக்கத் தொடங்கியுளது. இதன் மூலம் நெட்வொர்க் வேகத்தில் புதுமையை வாடிக்கையாளர்கள் அனுபவித்து வருகிறார்கள். 

இந்த மாடல்களில் 5ஜி இயங்கும்

ஆப்பிளின் ஐபோன்கள் இந்தியாவில் 5G நெட்வொர்க்கை குறிப்பிட்ட சில மாடல்கள் மட்டுமே பெற முடியும். Jio மற்றும் Airtel 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்க முடியும். இதில் iPhone 12, iPhone 12 Mini, iPhone 12 Pro மற்றும் iPhone 12 Pro Max, iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max, iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவை அடங்கும். iPhone SE 3வது ஜெனரல் அடங்கும்.

மேலும் படிக்க | விற்பனையில் சாதனை படைத்த சியோமி... ஆச்சரியத்தில் பயனர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News