iPhone 15: அதிகரிக்கிறதா விலை? கசிந்த தகவலால் அதிர்ச்சியில் பயனர்கள்

iPhone 15: இந்த ஆண்டு அறிமுகம் ஆகவுள்ள தொலைபேசி பற்றி நிறுவனம் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான வதந்திகள் மற்றும் கசிவுகள் வந்து கொண்டிருகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 16, 2023, 12:04 PM IST
  • ஆப்பிள் தனது ஐபோன் 15 தொடரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.
  • வெளியீட்டிற்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது.
  • பொதுவாக நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் புதிய ஐபோனை சந்தையில் அறிமுகம் செய்கிறது.
iPhone 15: அதிகரிக்கிறதா விலை? கசிந்த தகவலால் அதிர்ச்சியில் பயனர்கள் title=

ஐபோன் பிரியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!! ஆப்பிள் தனது ஐபோன் 15 தொடரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் சிறிது நேரம் உள்ளது. பொதுவாக நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் புதிய ஐபோனை சந்தையில் அறிமுகம் செய்கிறது. எனினும், இந்த ஆண்டு அறிமுகம் ஆகவுள்ள தொலைபேசி பற்றி நிறுவனம் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான வதந்திகள் மற்றும் கசிவுகள் வந்து கொண்டிருகின்றன. தொலைபேசியின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து டிப்ஸ்டர்கள் பல விஷயங்களைக் கூறியுள்ளனர். 

ஹைடாங் இன்டர்நேஷனல் செக்யூரிட்டிஸின் தொழில்நுட்ப ஆய்வாளர் ஜெஃப் பு, வரவிருக்கும் ஐபோனின் ப்ரோ மாடல்களின் விலை பற்றி கூறியுள்ளார். இது வாடிக்கையாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ப்ரோ மாடல்களுக்கு அதிக விலை இருக்கும்

தொழில்நுட்ப ஆய்வாளர் ஜெஃப் பு-வைப் பொறுத்தவரை, குறிப்பிடத்தக்க வன்பொருள் மேம்படுத்தல்கள் காரணமாக ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அதிக விலையுடன் வரக்கூடும். டைட்டானியம் பிரேம், கூடுதல் டாப்டிக் எஞ்சினிலிருந்து ஹாப்டிக் பின்னூட்டம் கொண்ட திட நிலை பொத்தான்கள், A17 பயோனிக் சிப், அதிகரித்த ரேம் மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடலில் ஆப்டிகல் ஜூம் அதிகரிக்க பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவை இந்த தொலைபேசியில் இருக்கும் என வதந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மொத்த குடும்பத்துக்கும் ரூ. 696 போதும்... ஜியோவின் அசத்தல் திட்டத்தை எப்படி பெறுவது?

இதுவரையிலான விலை விவரம்

ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை அதிகரிக்கும் என்று முன்பே மதிப்பிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, ப்ரோ மாடல் 999 டாலரில் தொடங்குகிறது. அதே நேரத்தில் ப்ரோ மேக்ஸ் அமெரிக்காவின் 1,099 டாலரில் தொடங்குகிறது. ஆனால் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்களால் பல நாடுகளில் ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

ஐபோன் 15 விலை எவ்வளவு?

நிறுவனம் லாபம் ஈட்ட விலையை அதிகரிக்க வேண்டும். ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிள்ஸ்- ஈண் விலை முறையே 799 டாலர் மற்றும் 899 டாலரில் தொடங்குகிறது. ஆனால் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் விலை அதிகரிக்குமா இல்லையா என்பது பற்றி இதுவரை எந்த தெளிவும் இல்லை. இது பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | அதிரடியாக 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய வோடபோன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News