iPhone 13-ல் நம்ப முடியாத ஆஃபரை அளிக்கும் Flipkart: ரூ. 42,000 பம்பர் தள்ளுபடி

Flipkart பிக் பசத் தமால் சேலில் ஐபோன் 13 இன் 128ஜிபி வகையை பாதி விலைக்கும் குறைவான விலையில், 42 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியில் வாங்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 20, 2022, 05:25 PM IST
  • பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனை.
  • இன்று முதல் விற்பனை ஆரம்பம்.
  • ஐபோன் வாங்க அதிரடி தள்ளுபடி.
iPhone 13-ல் நம்ப முடியாத ஆஃபரை அளிக்கும் Flipkart: ரூ. 42,000 பம்பர் தள்ளுபடி title=

பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனையில் ஐபோன் 13 பம்பர் சலுகை: ஆப்பிள் நிறுவனம் அனைவரும் வாங்க விரும்பும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை உருவாக்குகிறது. நீங்களும் ஐபோன் வாங்க விரும்பினால், இப்போது அதன் விலை உங்களுக்கு ஒரு தடையாக இருக்காது. 

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில், இன்று, அதாவது மே 20 முதல், பிக் பசத் தமால் சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், ஐபோன் 13 இன் 128ஜிபி வகையை பாதி விலைக்கும் குறைவான விலையில், 42 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியில் வாங்கலாம். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஐபோன் 13 இல் பெரும் தள்ளுபடி
ஐபோன் 13 இன் 128 ஜிபி சேமிப்பக மாறுபாட்டில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இங்கு காணலாம். ஐபோன் 13 (128ஜிபி) ரூ.79,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட் பிக் பசத் தமால் சேலில் 6%, அதாவது 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடிக்கு பிறகு இதனை 74,900 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும், எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டை கொண்டு இந்த போனை வாங்கினால், 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், ஐபோன் 13-ன் விலை 70,900 ரூபாயாக குறையும். 

மேலும் படிக்க | கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50 

இந்த வழியில் 42 ஆயிரம் பம்பர் தள்ளுபடி கிடைக்கும்
விற்பனையில் கிடைக்கும் தள்ளுபடி மற்றும் வங்கிச் சலுகைகளை இணைத்து ஐபோன் 13 (128ஜிபி)க்கு 9 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனை ரூ.70,900க்கு வாங்கலாம். இப்போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், 33 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான ஐபோன் 13 இன் விலை ரூ.79,900லிருந்து ரூ.37,900 ஆகக் குறையும். இதன் மூலம் ஐபோன் 13-ன் இந்த டீலில் மொத்தம் 42 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

ஐபோன் 13 இன் அம்சங்கள்
ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் விரைவான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். இதில் இரண்டு 12எம்பி சென்சார்கள் உள்ளன. இதன் முன்பக்க கேமராவும் 12எம்பி கொண்டது. இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போன் தண்ணீர் மற்றும் தூசியால் பாதிக்கப்படாது. மேலும் இது ஐபி68 மதிப்பீட்டை பெற்றுள்ளது.

மே 20 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனை மே 22 ஆம் தேதி வரை ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டின் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையில் இருக்கும்.

மேலும் படிக்க | OPPO ஸ்மார்ட்போனில் பம்பர் உடனடி தள்ளுபடிகள் அறிவிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News