இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு தற்போது புதிய மெசஞ்சர் அறைகளை உருவாக்கும் வசதியினை வழங்குகிறது மற்றும் பயன்பாட்டிலிருந்து உரையாடலில் சேர நண்பர்களை அழைக்கிறது.
வேகமாக வளர்ந்து வரும் ஜூம் வீடியோ கான்பரன்சிங் சேவையை எதிர்கொள்ளும் முயற்சியில் பேஸ்புக் கடந்த மாதம் மெசஞ்சர் அறைகளை அறிமுகம் செய்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் மெசஞ்சரை ஒருங்கிணைப்பதாக பேஸ்புக் அந்த நேரத்தில் கூறியிருந்தது, இந்நிலையில் தற்போது இந்த அம்சம் பயனர்களுக்கு நேரலையாக்கப்பட்டுள்ளது.
மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்பு பயனர்கள் 50 பேர் வரை சேரக்கூடிய தனியார் வீடியோ அரட்டை அறைகளை உருவாக்க அனுமதிக்கிறது. பேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் கூட இந்த உரையாடலில் சேர அனுமதிக்கிறது.
இதுதொடர்பான ஒரு அறிவிப்பில் “இன்று முதல், நீங்கள் இன்ஸ்டாகிராமில் மெசஞ்சர் அறைகளை உருவாக்கலாம் மற்றும் நண்பர்களையும் சேர அழைக்கலாம்” என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி செய்யும்பட்சத்தில் , நீங்கள் ஒரு புதிய அறையை உருவாக்கலாம் மற்றும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களை அழைக்கலாம், அதன் பிறகு நீங்கள் மெசஞ்சருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பேஸ்புக்கில் இல்லாதவர்கள் உட்பட 50 பேர் வரை இந்த குழுவில் சேரலாம். மேலும், உரையாடலில் அதிகமானவர்கள் நுழைவதை நீங்கள் விரும்பாதபோது அறையை பூட்டவும் முடியும்.
இன்ஸ்டாகிராம் வழியாக மெசஞ்சர் அறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என இன்ஸ்டாகிராம் பகிர்ந்த வீடியோ கொண்டு நாம் அறிந்துக்கொள்வோம்.
An easy way to video chat with up to 50 of your favorite people? Yes please
Starting today, you can create @messenger Rooms on Instagram and invite anyone to join pic.twitter.com/VKYtJjniEt
— Instagram (@instagram) May 21, 2020
இந்த வீடியோவின் படி இன்ஸ்டாகிராம் அறைகளை உருவாக்க பயனர்கள் முதலில் இன்ஸ்டாகிராம் நேரடி செய்திகளுக்கு செல்ல வேண்டும். அங்கு, வீடியோ அரட்டை ஐகானைத் தட்ட வேண்டும். பின்னர் Create a Room என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு அறைக்கான அழைப்புகளை அனுப்பலாம். இன்ஸ்டாகிராம் பின்னர் ஒரு அறையை உருவாக்கி அதற்கான இணைப்பைக் காண்பிக்கும். கூடுதலாக, இது அறையில் சேர அல்லது இணைப்பை அனுப்ப விருப்பத்தை வழங்கும்.
மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்பு வாட்ஸ்அப்பிற்கும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பயன்பாட்டின் பீட்டா பதிப்புகளில் தற்போது காணப்படுகிறது எனவும், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
குழு வீடியோ அழைப்பு தேவை அதிகரிப்பதைக் கண்ட பேஸ்புக், மெசஞ்சர் அறைகளை அறிமுகம் செய்துள்ளது.