Best Earbuds: ஆடியோ பாகங்கள் விற்பனை செய்யும் பிராண்டான ட்ரூக் இந்தியாவில் அதன் சமீபத்திய TWS இயர்பட்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நிறுவனம் Truke Buds F1 என்று பெயரிட்டுள்ளது. இந்த TWS இயர்பட்ஸ் மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Truke Buds F1 இயர்பட்ஸ்களில் அதிவேக கனெக்டிவிட்டி வழங்கும் ப்ளூடூத் 5.3 ஆனது. இது 55ms குறைந்த லேட்டன்சி பயன்முறையைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸில் உள்ள பேட்டரி இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Truke Buds F1 இன் அம்சங்கள்:
Truke Buds F1 இல் உடனடி கனக்டிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமான இணைப்பிற்காக இது புளூடூத் 5.3க்கான ஆதரவைக் கொண்டுள்ளது. புதிய TWS இயர்பட்ஸ்களில் சுற்றுச்சூழல் இரைச்சல் தடை (Noise Cancellation) செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் டூயல் மைக் சப்போர்ட் (Dual Mic Support) கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பேட்டரியில் லைஃப் கொடுக்கும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்கள்
ட்ரூக் பட்ஸ் F1 பணிச்சூழலியல் வடிவமைப்புடன் (Ergonomic Design) வருகிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ ஒருமுறை சார்ஜ் செய்தால் 48 மணிநேரம் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து 10 மணிநேரம் (Playtime) நீங்கள் பயன்படுத்தலாம் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
இதை முழுவதுமாக சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் ஆகும். 55ms அல்ட்ரா லோ லேட்டன்சி பயன்முறையின் காரணமாக, ட்ரூக் பட்ஸ் F1 கேமிங் பயன்பாடுகளிலும் சிறப்பாகச் செயல்படும். இதில், மேம்பட்ட வசதிக்காக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை நாசமாக்கும் செயலிகள்
Truke Buds F1 இயர்பட்ஸ் கருப்பு மற்றும் நீல வண்ண நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் சிரி (Siri) அம்சங்களை ஆதரிக்கிறது.
Truke Buds F1 விலை:
தற்போது ரூ.899 அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை சில நாட்கள் மட்டுமே. அதன் விலை பின்னர் ரூ.1299 ஆக இருக்கும். இ-காமர்ஸ் தளமான Flipkart மூலம் இதை வாங்கலாம்.
மேலும் படிக்க: மொபைல் சீக்கிரமே சூடாகுதா? தடுக்க சில வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR