வாட்ஸ் அப் செயலி சாட்டிங் செய்வதற்கு மட்டுமல்ல, வாய்ஸ் மெசேஜ் மற்றும் அழைப்புகள் மேற்கொள்ளும் செயலியாகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இண்டர்நெட் இருந்தால் மட்டுமே பயன்படுத்தகூடிய இந்த செயலியில், வாட்ஸ் அப் அழைப்புகளை மேற்கொண்டால் டேட்டா செலவாகும். ஆனால், இங்கே இருக்கும் டிரிக்ஸை பயன்படுத்தினால், டேட்டா செலவாகாமல் வாட்ஸ்அப் அழைப்புகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
வாட்ஸ் அப் டேட்டா
வாட்ஸ் அப் செயலியில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் டேட்டா செலவாகும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வாட்ஸ்அப் தகவலின்படி, வாட்ஸ்அப் குரல் அழைப்புக்கு ஓவ்வொரு நிமிடத்துக்கும் 720Kb டேட்டாவைப் பயன்படுத்துகிறது. இப்போது இந்த வழியில், நீங்கள் வாட்ஸ்அப்பில் நீண்ட நேரம் பேசினால், டேட்டா விரைவாக தீர்ந்துவிடும் அபாயம் உண்டு.
மேலும் படிக்க | அமேசானில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.2000-க்கும் குறைவான விலையில்
எந்த தந்திரம்?
நீண்ட நேரம் வாட்ஸ்அப் அழைப்புகளைச் செய்த பிறகும் டேட்டாவை எப்படிச் சேமிப்பது என்று யோசிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். இந்த டிரிக்ஸைப் பயன்படுத்து குறித்து உங்களுக்கே ஆச்சரியம் மேலோங்கும். அப்படி என்ன? அந்த டிப்ஸ் என கேட்கிறீர்களா?. உங்களுக்கான டிப்ஸ் இங்கே.
ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ்அப் செட்டிங்ஸூகளுக்கு செல்லுங்கள். அதில், சேமிப்பு மற்றும் டேட்டா என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், அழைப்புகளுக்கு குறைவான டேட்டாவை பயன்படுத்து என்ற ஆப்சன் இருக்கும். அதனை நீங்கள் ஆன் செய்யுங்கள். இனிமேல், நீங்கள் மேற்கொள்ளும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு மிகமிக குறைவான அளவில் மட்டுமே டேட்டா செலவாகும். வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்புகளுக்கு இந்த ஆப்சன் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR