இணைய உலகில் ஹேக்கிங் என்பது இப்போது அதிகரித்துவிட்டது. ஹேக்கிங் மூலம் ஆதாயம் தேடும் கும்பல் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்றால் யாருடைய அக்கவுண்டையும் ஹேக் செய்துவிடுவார்கள். அவர்களுடைய வழக்கமே இதுதான். சாதாரண நபராக இருந்தாலும், அவர்களின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் ஏதேனும் காரியம் நடக்க வேண்டும் என்றால், அக்கவுண்டை ஹேக் செய்து திட்டத்தை அரங்கேற்றிவிடுவார்கள்.
மேலும் படிக்க | கார் பராமரிப்பு கண்ணை கட்டுதா? இந்த டிப்ஸ் சிறந்த மைலேஜ் பெற உதவும்
ஹேக்கிங் மூலம் உங்களின் தனிநபர் தகவல்களை அவர்கள் வசம் கொண்டு செல்ல முடியும். உங்களுடைய அக்கவுண்டை ஹேக் செய்து உங்களின் நண்பர்களின் தகவல்களையும்கூட திருடிக் கொள்வார்கள். இப்படியான சிக்கல்கள் எப்போது வரும் என்றெல்லாம் ஜோசியம் கூற முடியாது. ஆனால், நீங்கள் எப்போதும் விழிப்பாகவும், ஹேக்கிங் பற்றிய குறைந்தபட்ச தக்கவல்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது உங்களை மட்டுமல்ல, நட்பு வட்டத்தில் இருப்பவர்களையும் பாதுகாக்க உதவும்.
அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என நீங்கள் கருதினால், உடனே பயப்பட வேண்டாம். முதலில் உடனடியாக பாஸ்வேர்டு மாற்றுதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதனை எப்படி செய்வது என நீங்கள் யோசித்தால், அக்கவுண்டில் பிரைவசி மற்றும் செட்டிங்ஸ் ஆப்சனுக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் பாஸ்வேர்டு மற்றும் செக்யூரிட்டி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதில் பாஸ்வேர்டு சேஞ்ச் ஆப்சனை தேர்நெடுத்து, புதிய பாஸ்வேர்டை உருவாக்குங்கள்.
மேலும் படிக்க | 5G Phones: ரூ.20,000-க்குள் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்கள்
இப்போது உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டின் பாஸ்வேர்டு மாற்றப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து அதே பக்கத்தில் உங்கள் அக்கவுண்ட் லாகின் செய்த டிவைஸ்களின் லிஸ்டும் இருக்கும். இதில் Where You're Logged in என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்குச் சொந்தமில்லாத டிவைஸ் அல்லது நீங்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தாத கம்ப்யூட்டரை கண்டறிந்தால், உடனடியாக உங்கள் அக்கவுண்ட்-ஐ டி ஆக்டிவேட் செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து பேஸ்புக் ஹெல்ப் பக்கத்தில் சென்று புகார் அளியுங்கள்
அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, ஹேக்கர் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் உங்களை நுழைய விடாதபடி லாக் செய்திருந்தால் Facebook.com/hacked-பக்கத்துக்கு செல்லவும். இதற்கு உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் உடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணை உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் பதிவிடும் தொலைபேசி எண் சரியாக இருந்தால், உங்கள் அக்கவுண்டை மீட்டெடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR