ஸ்மார்ட்போன் இருந்தாலும் இண்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது. தனியார் நெட்வொர்குகளை பயன்படுத்தும் அனைவரும் அதிக விலை கொடுத்து மாதாந்திர டேட்டா திட்டங்களை பயன்படுத்துகின்றனர். சிலர் அதிக விலை கொண்ட திட்டங்களை ரீச்சார்ஜ் செய்வதற்கு கஷ்டமாக இருப்பதால், குறைவான வசதிகளை கொண்ட பிளான்களை தேர்ந்தெடுத்து ரீச்சார்ஜ் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கான டேட்டா பேக் என்பது நாள் ஒன்றுக்கு மிக குறைவாகவே இருக்கும்.
அவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது, இலவசமாக கிடைக்கக்கூடிய வைஃபை கனெக்ஷனை பயன்படுத்திக் கொண்டால், டேட்டா செலவும் குறையும். தேவையானவற்றையும் பார்த்து மகிழ முடியும். இதில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை பொது இடங்களில் இருக்கும் வைஃபை கனெக்ஷனை எப்படி கண்டுபிடிப்பது? என்பதுதான். அதனைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் மொபைலில் இருக்கும் பேஸ்புக் வழியாகவே இலவச வைஃபை கனெக்ஷன்களை கண்டுபிடித்துவிடலாம். இதற்காக பிரத்யேகமாக ஹாட்ஸ்பாட் தேடல் செயலிகள் தேவையில்லை.
பேஸ்புக்கில் இருக்கும் இந்த வசதியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோன் யூசர்கள் அனைவருமே பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு யூசர்கள் உங்கள் மொபைலில் இருக்கும் பேஸ்புக் பக்கத்தை திறக்க வேண்டும். பின்னர், பேஸ்புக்கின் வலது மேல் புறத்தில் இருக்கும் மூன்று கோடுகளை கிளிக் செய்யுங்கள். அதில் தோன்றும் மெனுவில் உங்கள் பிரைவசி பாலிசி செட்டிங்ஸூக்குள் செல்ல வேண்டும். அங்கு Find Wi-Fi என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்களைச் சுற்றியுள்ள பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பற்றி Facebook உங்களுக்குத் தெரிவிக்கும்.
மேலும் படிக்க | Tech Tips: ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க சில ‘Password’ டிப்ஸ்..!
ஒருமுறை எந்த வைஃபை கணெக்ஷனும் காட்டவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை கிளிக் செய்து தேடுங்கள். அதில் இலவச வைஃபை கிடைத்தால், அதனுடன் கணெக்ஷன் செய்து டேட்டாவை பயன்படுத்துங்கள். நகர்புறங்களில் அதிக இலவச வைஃபை கனெக்ஷன்கள் இருக்கும். இந்த டிப்ஸ் பெரும்பாலும் நகர்புறத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவைதவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் இப்போதெல்லாம் இலவச வைஃபை கனெக்ஷனகள் உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR