பிளே ஸ்டோரில் இல்லாத ஆப்ஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி

ஒரு நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சில ஆப்ஸ்களை சில வழிமுறைகளை பின்பற்றி பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்யலாம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 24, 2022, 12:13 PM IST
  • சில ஆப்ஸ்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு காரணங்களுக்குகாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • சில முறைகளில் அதனை இன்ஸ்டால் செய்ய முடியும்.
பிளே ஸ்டோரில் இல்லாத ஆப்ஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி title=

பிளே ஸ்டோரில் சில ஆப்ஸ்கள் உங்களது நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்று சில எச்சரிக்கைகளை பிளே ஸ்டோர் நமக்கு காமிக்கிறது.  இதற்கான காரணம் சில ஆப்ஸ்கள் குறிப்பிட்ட நாடுகளின் விதிகளுக்கு கட்டுப்படாமலோ அல்லது பொருந்தாமலோ இருக்கின்றது. இதனால் சில நாடுகள் சில ஆப்ஸ்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி விடுகிறது.  ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அன்றாடம் பலவிதமான புதுப்புது ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர், பொழுதுபோக்கிற்காகவோ, படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ அல்லது சில முக்கியமான தகவல்களை பற்றி அறிந்திட என்று பலவித ஆப்ஸ்களை பயனபடுத்துகின்றனர்.  இருப்பினும் மக்கள் விரும்பக்கூடிய அனைத்து ஆப்ஸ்களை அவர்களுக்கு பிளே ஸ்டோரில் கிடைத்து விடுகிறதா என்றால் இல்லை, அவர் விரும்பும் ஒருசில ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் கிடைப்பதில்லை.

மேலும் படிக்க | இந்த வாரம் அறிமுகமான பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்கள்

இவ்வாறு நமது நாடுகளில் கிடைக்காத ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  கூகுள் பிளே ஸ்டோரில் முகவரி பக்கத்திற்கு செல்ல வேண்டும், அங்கு உங்களது அக்கவுண்ட் இயங்கவில்லையெனில் நீங்கள் லாகின் செய்யவேண்டும்.  பின்னர் அதில் நாடு/பிரதேசம் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும், அதனை தொடர்ந்து புதிய ப்ரோபைலை உருவாக்கு என்பதை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான ஆப்ஸ் எந்த நாட்டில் செயல்படுமோ அந்த நாட்டை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.  உங்கள் முகவரியை நீங்கள் சரியாக பதிவேற்றியதும் கூகுள் பிளே ஸ்டோர் 48 மணி நேரத்தில் உங்களது நாட்டை மாற்றிவிடும்.

இவ்வாறு கூகுள் பிளே ஸ்டோரில் உங்களது நாட்டை மாற்றுவது சில சமயங்களில் செயல்படாமல் போக கூட வாய்ப்பில்லை.  விபிஎன்-ஐ பயன்படுத்துவதன் மூலமும் நாடுகளின் இருப்பிடத்தை மாற்றி ஆப்ஸ்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.  இதனை செய்ய முதலில் நீங்கள் விபிஎன் செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.  நீங்கள் எந்த நாட்டை மாற்றுகிறீர்களோ அந்த நாட்டில் அந்த ஆப்ஸ் செயல்படுகிறதா என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.  விபிஎன் மூலம் உங்களது முகவரியை மாற்றியதும் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோர் சென்று தேவைப்படும் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | இந்தியாவில் அறிமுகமாகும் Oneplus Smartwatch! என்ன ஸ்பெஷல் இதில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News