ஜூன் மாதம் இந்த டாடா கார்களில் அதிரடி தள்ளுபடி: முந்துங்கள்!!

Tata Motors: பிரபல வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் தனது பல மாடல்களுக்கு ஜூன் 2023 இல் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 13, 2023, 06:53 PM IST
  • டாடா டியாகோ ஹேட்ச்பேக் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சார பவர் ட்ரெயின்களில் கிடைக்கிறது.
  • இதன் பெட்ரோல் பதிப்புக்கு இந்த மாதம் ரூ. 30,000 வரை மொத்த தள்ளுபடி கிடைக்கிறது.
  • இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ. 20,000 வரையிலான பிற நுகர்வோர் திட்டங்கள் அடங்கும்.
ஜூன் மாதம் இந்த டாடா கார்களில் அதிரடி தள்ளுபடி: முந்துங்கள்!!  title=

Tata Motors: பிரபல வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), ஹேரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) போன்ற மாடல்களின் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் ஜூன் 2023 இல் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகையில் பஞ்ச் மற்றும் நெக்ஸான் எஸ்யூவி -கள் சேர்க்கப்படவில்லை. எந்த மாடலில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று இந்த பதிவில் காணலாம்.

டாடா டியாகோ

டாடா டியாகோ ஹேட்ச்பேக் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சார பவர் ட்ரெயின்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் பதிப்புக்கு இந்த மாதம் ரூ. 30,000 வரை மொத்த தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ. 20,000 வரையிலான பிற நுகர்வோர் திட்டங்கள் அடங்கும். அதன் சிஎன்ஜி பதிப்புக்கு ரூ. 43,000 வரையிலான மொத்த தள்ளுபடி கிடைக்கின்றது. இதில் ரூ. 30,000 வரையிலான நுகர்வோர் திட்டங்கள், ரூ. 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ. 3,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

டாடா டிகோர்

டாடா டிகோர் காரின் பெட்ரோல் மாடல் இந்த மாதம் ரூ. 33,000 வரை மொத்த தள்ளுபடி பெறுகிறது. அதன் சிஎன்ஜி மாடல் ரூ. 48,000 வரை மொத்த தள்ளுபடியைப் பெறுகிறது. இரண்டு மாடல்களிலும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை கிடைக்கின்றன.

மேலும் படிக்க | ரெனால்ட் டஸ்டருக்கான காத்திருப்பு முடிந்தது! 7 இருக்கைகள் கொண்ட மாடல் அறிமுகம்

டாடா அல்ட்ராஸ்

டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் -​​இன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் சிஎன்ஜி மாறுபாட்டிற்கு எந்த தள்ளுபடியும் கொடுக்கப்படவில்லை. XE மற்றும் XE+ டிரிம்களைத் தவிர, இந்த காரின் மற்ற அனைத்து பெட்ரோல் வகைகளும் ரூ. 25,000 வரை தள்ளுபடி பெறுகின்றன. அதன் XE மற்றும் XE+ டிரிம்களில் மொத்தம் ரூ. 10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், அதன் அனைத்து டீசல் வகைகளிலும் ரூ. 30,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி

டாடா மோட்டார்ஸ் இந்த ஜூன் மாதம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி -களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 35,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதில் ரூ. 25,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், அனைத்து வகைகளிலும் ரூ. 10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த மாடல்களில் நுகர்வோர் தள்ளுபடி எதுவும் வழங்கப்படவில்லை.

கூடுதல் தகவல்

உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.  

- டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
- அவ்வப்போது டயர்களை மாற்றவும்
- டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
- எப்போது கார் டயர்களை மாற்ற வேண்டும் என்பதை அவ்வப்போது கவனியுங்கள்

மேலும் படிக்க | கார் வாங்கும் எண்ணம் உள்ளதா? ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகம் ஆகவுள்ள கார்களின் பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News