CoWIN போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சம் அறிமுகம்; விபரம் உள்ளே

பல பயனர்கள் அளித்த புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 7, 2021, 07:17 PM IST
  • புதிய பாதுகாப்பு அம்சம் தடுப்பூசி தரவுகளில் ஏற்படும் பிழைகளை பெருமளவு குறைக்கும் என கூறப்படுகிறது.
  • நான்கு இலக்க பாதுகாப்புக் குறியீடு ஒப்புதல் சீட்டில் அச்சிடப்படும்
  • புதிய அம்சம் தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
CoWIN  போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சம் அறிமுகம்; விபரம் உள்ளே title=

புதுடெல்லி: கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் பதிவு செய்ய அரசு அறுமுகப்படுத்தியுள்ள போர்டல் மற்றும் செயலி தான் CoWIN ஆகும். 
 
இது தொடர்பாக பல பயனர்கள் அளித்த புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சம் தடுப்பூசி தரவுகளில் ஏற்படும் பிழைகளை பெருமளவு குறைக்கும் என கூறப்படுகிறது. "கோவின் போர்டலில் மே 8 முதல் நான்கு இலக்க பாதுகாப்பு குறியீட்டின் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது, தடுப்பூசி நிலை குறித்த தரவு உள்ளீட்டு பிழைகளை குறைப்பதோடு, பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் இது குறைக்கும்" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிக்காக பதிவு செய்தவருக்கு, தடுப்பூசி போடாமலேயே, அவருக்கு தடுப்பூசி  போடப்பட்டதாக தக்வல் அனுப்பப்பட்டது போன்ற பிழைகள் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 

புதிய நான்கு இலக்க பாதுகாப்புக் குறியீடு எவ்வாறு செயல்படும்?

-இந்த புதிய அம்சம் தடுப்பூசி  போடுவதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

- நான்கு இலக்க பாதுகாப்புக் குறியீடு ஒப்புதல் சீட்டில் அச்சிடப்படும். 

- தடுப்பூசி பெற முன்பதிவு செய்த பின்னர் பயனாளிக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்ஸில், இந்த  4 இலக்க குறியீடு எண் இருக்கும்.

- இதை தடுப்பூசி பெற போகும் போது, காண்பிக்க வேண்டும்

- ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களின் தடுப்பூசி நிலை குறித்த தரவு உள்ளீடுகள் சரியாக பதிவு செய்யப்படுவதை இது உறுதி செய்யும்.

-இதனால், பிழைகள் பெருமளவு குறையும்

ALSO READ | தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi

தடுப்பூசி மையத்திற்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய அனைத்து ஆவணங்களும் என்ன?

- தடுப்பூசி போடச் செல்லும் போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் கிடைத்த உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் தகவலை எடுத்துச் காண்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.

- பாதுகாப்பு குறியீட்டைக் கொண்டு தடுப்பூசி தொடர்பான பதிவு புதுப்பிக்கப்பட்ட பின்னரே டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும் என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பாதுகாப்பு குறியீட்டை வழங்க வேண்டும்.

- தடுப்பூசி போடப்பட்டது அதை உறுதிபடுத்தும் எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும்.

தடுப்பூசி செயல்முறை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு டிஜிட்டல் சான்றிதழ்  கிடைத்துள்ளது என்பதை இந்த  எஸ்எம்எஸ் குறிக்கிறது.

எஸ்எம்எஸ் வரவில்லை என்றால், தடுப்பூசி மையத்தின் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ | சட்ட விரோதமாக 524 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பதுக்கல்: தில்லி போலீஸ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News