கூகுள் நிறுவனம் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஜெமினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், முந்தைய மாடல்களான LaMDA மற்றும் BARD-ஐ விட பல்வேறு வடிவங்களில் உள்ள தரவுகளை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இது உரை, குரல், படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே நேரத்தில் செயலாக்கி, அவற்றின் இடையே உள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம், இது மனிதர்களுடன் இயற்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல்களை நடத்தவும், பல்வேறு வகையான பணிகளைச் செய்யவும் முடியும்.
ஜெமினி மூன்று வெவ்வேறு வெர்ஷன்களில் வருகிறது: அல்ட்ரா, ப்ரோ மற்றும் நானோ. அல்ட்ரா மாடல் சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது. ப்ரோ மாடல் பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது. நானோ மாடல் உங்கள் டிவைஸ்க்கான பணிகளை செய்யும்.
மேலும் படிக்க | இதுதான் 2024இல் சூப்பர்ஸ்டார் ஸ்மார்ட்போன்... 5 காரணங்கள் இதோ!
ஜெமினியின் சிறப்பம்சங்கள்:
- இது டெக்ஸ்ட், கோட், ஆடியோ, இமேஜஸ் மற்றும் வீடியோஸ் என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்துகொள்ளும்.
- இது புகைப்படங்கள் மற்றும் ஆடியோவை புரிந்துகொள்வது முதல் சிக்கலான கணிதம் வரையிலான பல்வேறு பணிகளை செய்ய முடியும்.
- இது 90 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் மற்றும் நெறிமுறைகள் போன்ற 57 பாடங்களின் கலவையை பயன்படுத்தும் எம்எம்எல்யு-வில் மனித நிபுணர்களை விட சிறந்த மாடலாக உள்ளது.
- இது உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது.
- இது கோடிங் எழுதவும் முடியும்.
- ஜெமினிக்கு பயிற்சி அளிக்க கூகுள் நிறுவனம் டென்சர் ப்ராசசிங் யூனிட்ஸ் எனப்படும் ஸ்பெஷல் எஞ்சின்களை பயன்படுத்தியுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் கிளவுட் டிபியு வி5பி என்று அழைக்கப்படும் புதிய எஞ்சினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சூப்பர்-அட்வான்ஸ்டு ஏஐ-ஐ பயிற்றுவிப்பதற்கான மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும்.
- ஜெமினி, கூகுள் தேடல், கூகுள் விளம்பரங்கள், கூகுள் குரோம் மற்றும் கூகுள் டூயட் போன்ற கூகுள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாட்ஜிபிடி 4-ஐ விட கூகுள் ஜெமினி சிறந்ததா?
ஜெமினி இன்னும் ஆரம்ப கட்ட சோதனையில் இருந்தாலும், இது சாட்ஜிபிடி 4-ஐ விட நெகிழ்வானதாக தெரிகிறது. மேலும் வீடியோவில் வேலை செய்யும் மற்றும் இண்டர்நெட் இல்லாத டிவைஸ்களில் வேலை செய்யும் இதன் திறன், சாட்ஜிபிடி 4-ஐ பின்னுக்கு தள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கூகுள் ஜெமினி இப்போது இலவசமாக அணுக கிடைக்கிறது. இது கூகுள் பார்ட் மற்றும் பிக்சல் ப்ரோ மாடல்களில் அணுக கிடைக்கிறது. மறுகையில் உள்ள சாட்ஜிபிடி 4 ஆனது பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. எனவே, கூகுள் ஜெமினி, சாட்ஜிபிடி 4-ஐ பின்னுக்கு தள்ளும் சக்தி கொண்டதாக தோன்றுகிறது
மேலும் படிக்க | அகவுண்ட் நம்பர் மறந்துட்டா... இந்த வழியில் ஈஸியாக பேங்க் பேலன்ஸை செக் செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ