கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து TikTok செயலி நீக்கம்!!

மத்திய அரசு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TikTok செயலியை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, TikTok செயலி நீக்கப்பட்டது.

Last Updated : Apr 17, 2019, 09:07 AM IST
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து TikTok செயலி நீக்கம்!! title=

மத்திய அரசு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TikTok செயலியை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, TikTok செயலி நீக்கப்பட்டது.

TikTok செயலி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியால் பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்கும் பலர் இந்த TikTok விபரீதத்தால் உயிரையும் விட்டிருக்கின்றனர் மேலும் பலர் பிரபலமாகியும் உள்ளனர்.

அந்தவகையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து TikTok என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியை உலக முழுவதும் உள்ள பொதுமக்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த செயலிக்கு தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தற்போது டிக்டாக் செயலியை கூகுல் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்தியாவில் கூகுல் நிறுவனம் நீக்கியுள்ளது. இதனால் TikTok-ல் வளம் வந்த இளம் வயதினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News