Chrome, Twitter போல இனி Youtube-லும் Night Mode வசதி!

பிரபல வீடியோ பதிவு தளமான Youtube மொபைல செயலியில் இறுதியாக Night Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Jul 31, 2018, 08:15 PM IST
Chrome, Twitter போல இனி Youtube-லும் Night Mode வசதி! title=

பிரபல வீடியோ பதிவு தளமான Youtube மொபைல செயலியில் இறுதியாக Night Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

Chrome, Twitter போன்ற செயலிகளில் இருப்பதுப் போல் தற்போது Youtube-லும் இரவு நேரத்திற்கு பயன்படும் வகையில் Night Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியானது தற்போது Android போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் வீடியோ பதிவு தளமான Youtube தனது வாடிக்கையாளர்களு பயன் அளிக்கும் திட்டங்கள் பலவற்றை சமீக காலமாக அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது Night Mode வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியினை கொண்டு பயனர்கள் இரவு நேரங்களில் குறுகிய ஒளிக்கற்றை வெளியிடும் Youtube செயலியினை பயன்படுத்த இயலும். வெளிச்சம் அற்ற நேரங்களில் அதிக ஒளிகற்றை வெளியிடும் செயலிகள் கண்களை பாதிக்கும் என்பதால் மொபைல் செயலிகள் பல தங்களது செயலிகளில் Night Mode வசதியினை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தான் Youtube இந்த வசதியினை அறிமுகம் செய்கிறது.

முன்னதாக  Music Streaming வசதியினை தனது வாடிக்கையாளர்களுக்கா Youtube அறிமுகம் செய்தது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களின் பட்டியலை உருவாக்கி இசைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பயனர்களுக்கு தேவையான இடைவெளியில் விளம்பரங்களை ஒளிப்பரப்பும் வசதியினை அறிமுகம் செய்தது. தனது பயனர்களை கவர இன்னும் பல வசதிகளையும் தொடர்ந்து Youtube அறிமுகம் செய்து வருகின்றது.

Trending News