அயோத்தி ராமர் கோவில் செல்ல Free VIP Entry பெற முடியுமா.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

வாட்ஸ்அப்பில் (WhatsApp) அப்பாவி மக்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் மோசடி வெளியாகியுள்ளது. திருவிழாவின் உற்சாகத்தைப் பயன்படுத்தி, இந்த சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப்பில் ராமர் கோவிலுக்கு இலவச விஐபி பாஸ்  (free VIP entry) வழங்குகிறார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2024, 01:20 PM IST
  • ராமர் கோவில் குறித்து வாட்ஸ்அப் மோசடி போலி செய்தி.
  • எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கவ வேண்டாம்.
  • இலவச பிரசாதம் என்ற போலிச் செய்தியும் உலாவி வருகின்றது.
அயோத்தி ராமர் கோவில் செல்ல Free VIP Entry பெற முடியுமா.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

ராமர் கோவில் (Ram Mandir) கும்பாபிஷேக விழா (Pran Pratishtha ceremony) நெருங்கி வரும் நிலையில், வாட்ஸ்அப்பில் (WhatsApp) வாட்ஸ்அப் மோசடி வெளியாகி, அப்பாவி மக்களை குறிவைத்து வருகிறது. இந்த நிகழ்வின் உற்சாகத்தைப் பயன்படுத்தி, இந்த சைபர் குற்றவாளிகள் இலவச VIP பாஸ்களை (free VIP entry) வாட்ஸ்அப்பில் கவர்ந்திழுக்கின்றனர். இந்த விஐபி பாஸ்கள் முற்றிலும் போலியானவை மற்றும் நம்பக்கூடாது.

வாட்ஸ்அப் மோசடி போலி செய்தி | WhatsApp Scam Fake Message:
ராமர் கோயிலுக்கு செல்ல இலவச விஐபி பாஸ் தருவதாக வாட்ஸ்அப்பில் சில மர்மநபர்கள் போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையல்ல, இந்த மோசடி செய்திகளை நம்பவே வேண்டாம். சிலர் ஏற்கனவே இதுபோன்ற செய்திகளைப் பெற்றுள்ளனர் மற்றும் சமூக ஊடகங்களில் அதன் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் போலிச் செய்திகள், APK பைல் பதிவிறக்கம் செய்யும்படி கேட்கும், இது உண்மையில் உங்கள் தகவலைத் திருடுவதற்கான ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம். இதுபோன்ற செயலிகளில் உளவு வைரஸ்கள் (spyware) அல்லது தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் (malware) இருக்கலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே, அத்தகைய செய்தியுடன் இணைக்கப்பட்ட எந்த இணைப்பையும் திறக்கவோ அல்லது எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கவோ வேண்டாம்.

மேலும் படிக்க | இலவச கேஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிப்பது எப்படி, ஆன்லைன் செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்

இந்த செய்தி மக்கள் தற்போது பெற்று வருகின்றனர்:
இந்த போலி எஸ்எம்எஸ் இல் கூறியிருப்பதாவது, "வாழ்த்துக்கள்! ஜனவரி 22 ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு தரிசனம் செய்ய உங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து விஐபி பாஸைப் பெறுங்கள்." என்று எழுதப்பட்ட செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால், இது பொய்யான செய்தியாகும்... இந்த செயலியை டவுன்லோட் செய்வதற்கு ஈடாக அரசோ அல்லது ராம் கோவில் அறக்கட்டளையோ யாருக்கும் சிறப்பு தரிசனம் செய்வதில்லை. அழைக்கப்பட்ட நபர்கள் அல்லது அரசுப் பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே உண்மையான தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, இதுபோன்ற போலிச் செய்திகளை நம்பாதீர்கள் மற்றும் அவற்றின் இணைப்பை ஒருபோதும் திறக்காதீர்கள்.

அதேபோல் ராமர் கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை சுமுகமாக நடத்துவதற்காக ஹோட்டல்களில் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளை ரத்து செய்யுமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். ராம் கோவில் அறக்கட்டளையால் பிரத்யேகமாக அழைக்கப்பட்டவர்களுக்கு அறைகள் வழங்குவதே அவர்களின் முன்னுரிமை. அதாவது பார்க்க வந்தவர்கள் ஹோட்டல் அறை கிடைக்காமல் சிரமப்படுவார்கள்.

இலவச பிரசாதம் என்ற போலிச் செய்தியும் உலாவி வருகின்றது:
இதனிடையே வாட்ஸ்அப்பில் போலி விஐபி (VIP Pass) பாஸ்களைத் தவிர, சில போலி இணையதளங்கள் ராமர் கோயிலில் இருந்து "இலவச பிரசாதம்" (Free Prasadam) அனுப்பப்படும் என்று தூண்டுகின்றன. அவர்களின் வலையில் சிக்காதீர்கள்! இந்த இணையதளங்கள் கட்டணத்தை மட்டுமே கேட்கின்றன, ஆனால் உண்மையில் ராமர் கோவிலில் இருந்து பிரசாதத்தை அனுப்புவார்களா இல்லையா என்பது தெரியவில்லை. எனவே, அரசாங்கத்திடம் இருந்து உறுதியான செய்தி வரும் வரை இதுபோன்ற விஷயங்களுக்கு பணத்தை செலவிட வேண்டாம். மோசடியைத் தவிர்க்க, ஆன்லைனில் கவனமாக இருங்கள் மற்றும் நம்பகமான வலைத்தளங்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்தப்படியே திருமண பதிவுச் சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News